RSS

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..


ரித்துவின் விளையாட்டு...

சாதரனமா வீட்டில் சப்பாத்தி செய்யும் பொழுது எல்லாம் ரித்துவின் அம்மா ரித்துவிற்காக எதாவது விசேஷமாக செய்துகொடுப்பது உண்டு.. சில நேரம் சப்பாத்தி சுடும் முன் மாவில் வித விதமாக உருட்டி சில உருவங்களை விளையாட்டாயும்.. மிக்கி, டோரா வடிவிலான சப்பாத்தியை சுட்டு அவள் சாப்பிடுவதற்க்காகவும் என்று..

கடந்த முறை அவ்வாறு சப்பத்தி செய்யும் பொழுது நாங்கள் பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்களில் ரித்துவே சப்பாத்தி மாவு எடுத்து செய்த “ நத்தை” தான் இது..

இது ரித்துவின் வீட்டுக்குள்ளான கிரிக்கெட் ஆட்டம்.. மேட்ச்ல கூட பவுளிங் போட்டுடலாம் கூட.. இங்கு வீட்டில் சரியா பவுல் பன்றதுக்குள்ள... !!!
இது புதிதாக வாங்கின கோல்ப் விளையாட்டு ..


கிருஸ்துமஸ்..

ஆண்டு இறுதி வந்தாலே இங்கு எங்கள் நிருவனத்தில் எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் தான் ஏதாவது ஒரு விதத்தில் .. இந்தமுறை பக்ரீத்தும் சேர்ந்து விட்டதால் நவம்பர் இருதியிலிருந்தே ஒரே கொண்டாட்டம் தான்.. அலுவலகத்தில் தினமும் கேக், ஸ்வீட்ஸ்னு அமர்க்களம் தான்..
இங்கு எல்ல ஷாப்பிங் நிருவனங்கள் மற்றும் சில இடங்களில் எங்கும் அலங்கரிக்கப்பட்ட கிருஸ்துமஸ் மரங்களும்.. குறைந்த விலை தள்ளுபடி விற்பனைகளுமாய் செல்கிறது.. அதுவும் இல்லாமல் மஸ்கட்டில் நல்ல மழையும் குளிர்ந்த வானிலையும் நல்ல ஒரு திருவிழா தோற்றத்தைக் கொடுக்கின்றன.. (முக்கியமா அலுவலகமே வெறிச்சோடிக் கிடக்கு.. அதான்.. ;))

சென்ற வாரம் சிட்டி செண்டரில் ஷாப்பிங் சென்ற பொழுது அங்கு கிருஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பதை கண்ட ரித்துவும் அந்த கடைப்பெண்னுடன் சேர்ந்து அவலும் பந்துகள், பாக்ஸ்கள் என எடுத்து மரத்தில் அடுக்க ஆரம்பித்துவிட்டாள்.. அன்றிலிருந்து கிருஸ்துமஸ் மரம் எப்போ வைக்கலாம் என்று தினமும் கேட்க ஆரம்பித்து .. இப்போ கிருஸ்துமஸ் தாத்தாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்..

சரி நம்மளும் கொண்டாடிலாம்னு ..... எங்க வீட்டிலயும் இங்கே கிருஸ்துமஸ் மரம் மட்டும் நட்சத்திரங்கள்..




மஸ்கட்டில் மழை...

இங்கு கடந்த வெள்ளி இரவில் இருந்து தினமும் மாலையில் நல்ல மழை.. பகலிலும் மேகமூட்டமாகவே இருக்கிறது.. வெள்ளி இரவு மழை பெய்ய தொடங்கியதுமே ரித்துவிற்க்கு ஒரே மகிழ்ச்சி.. மழை மழை என்று வீட்டுக்குள்ளேயே ஒரே ஆட்டம்..

சரி மஸ்கட்டிலேயே பெரிய மழை பெய்யறப்போ நாம அதுல நனையாட்ட எப்படினு.. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு குடை எடுத்துட்டு வீட்டுக்கு வெளியே உள்ள ரோட்டில் மழையோடு நடக்க ஆரம்பித்தோம்..


அப்பொழுது உடன் வந்த அவங்க அம்மா எடுத்த புகைப்படங்கள் தான் இவை..
மழைல வந்துட்டு.. தன்னில ரித்து ஒரே ஆட்டம் தான்.. திருப்பி வீட்டுக்கு கொண்டு போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு..



Rithus Photos..


இது கசாபில் போட்டிங் சென்ற பொழுது எடுத்தது..


இது ரித்துவின் பிறந்த நாள் விழாவில்..


வீட்டில்.. நடனமாடும் பொழுது..


வீட்டில்..





கசாப் பயணம்..

விடுமுறையின் மூன்றாவது நாள் மஸ்கட்டிலியே ஊர் சுற்றியாகிவிட்டதால்.. நான்காம் நாள் கசாப்பிற்க்கு (இது அந்த “ கசாப்” இல்லீங்க.. ஓமான் நாட்டின் ஒரு பகுதி) க்கு பயணித்தோம்..

ஏற்க்கனவே ஓமன் ஏரில் டிக்கட்டுகள் பதிவு செய்துவிட்டதாலும் உள் நாட்டு விமான பயனமாதலாலும் ஒன்னரை மணி நேரம் முன்னதாக விமான நிலையம் வந்தோம்.. ஆனால் செக் இன் கவுண்டரில் நான் பனி செய்யும் “ நிறுவனத்திடம் இருந்து NOC’ இருந்தால் மட்டுமே கசாப் பயணம் அனுமதிக்க முடியும் என்று செக் இன் செய்ய மறுத்துவிட்டனர்..!! ”கசாப்” என்றாலே பிரச்சினை தானோ??

சரி என்ன செய்தால் செக் இன் செய்வீர்கள்? என்னால் இன்று என் அலுவலகத்தில் கடிதம் வாங்கி வர முடியாது என்ற போது.. சரி இங்கு இருக்கும் ROP ல் ஒரு சீல் வாங்கி வாருங்கள் என்றனர்.. சரி சுலபமாக வாங்கி விடலாம் என்று அங்கு சென்றால்.. அவர்களும் அலுவலக கடிதம் இருந்தால் மட்டுமே அனுமதி என்று கூறிவிட்டனர்.. !! “கசாப்” ஓமானின் ஒரு பகுதியாகவே இருந்தாலும் அங்கு செல்வதற்க்கு யூ ஏ இ (அதாங்க துபாய்)வழியாக தான் செல்ல வேண்டி இருப்பதால் இந்த கெடுபிடி.. இவ்வளவுக்கும் எங்கள் பயணம் வான் வழியாக இருந்தும் இத்துனை கெடுபிடி..

சரி என்னதான் செய்றது கசாப் போறதுன்னு வந்தாச்சு.. சரி நாமே நேரே ROP யின் மூத்த அதிகாரியை பார்க்கலாம்னு சென்று கேட்டேன்.. சரி காத்திருங்கள் என்று கூரி ஒரு அரை மணி நேரம் காக்க வைத்தார்கள்.. இறுதியில் அவரிடம் சென்று நான் கசாப் செல்லவேண்டும் அதும் குடும்பத்துடன் சுற்றுலாவிற்க்காக என்று கூரி..அவரின் நம்பிக்கையை பெற்று “சீல்” வாங்கி விட்டு விமான கவுண்டர்க்கு செக் இன் செய்ய வந்தேன்.. ஓமான் செக் இன் கவுண்டரில் இருப்பவரோ.. சாரி சார் நாங்கள் எல்லா விமானத்திற்க்கும் ஒரு மணி நேரம் முன்னதாகவே செக் இன் முடித்துவிடுவோம் என்று..

என்னடா இதுன்னு அவரிடம் நடந்தவைகளனத்தையும் கூறி நீங்கள் தான் ROP யின் சீல் வேண்டும் என்று சொன்னீர்கள் அதனால் தான் தாமதம் என்று கூறியும்.. ம்ம் கடைசியில் எப்படியோ பெரிய மனசு வைத்து செக் இன் செய்து கொடுத்தார்.. ஒரு வழியா விமானம் ஏறி கசாப் வந்தடைந்தோம்..

வந்ததும் நேரே மலைச்சவாரி தொடங்கினோம்.. ம்ம் மலையே மலை தான் கசாப் முழுவதும்.. 2800 மீட்டர் உயரம் வரை பயனித்தோம்.. அங்கு எடுத்த புகைப்படங்கள் இவை...





மலை உச்சியிலிருந்து திரும்ப வரும் பொழுது ரித்து பாடிய பாட்டை இங்கே கேட்கலாம்..

நினைவுகள்..பக்ரீத் 2009



கடந்த வாரம் பக்ரீத்துக்காக இங்கு 9 நாட்கள் விடுமுறை.. விடுமுறையின் முதல் நாள் இங்கு இருக்கும் யெட்டி பீச்க்கு சென்றிருந்தோம்.. அப்பொழுது பீச் மணலில் விளையாடிக்கொண்டிருந்த ரித்துவின் வீடியோ தான் மேலே இருப்பது..

அடுத்த நாள் மஸ்கட்டிலேயே கடலுக்குள் டால்பின் பார்க்க சென்றிருந்தோம்..மிகவும் அழகான டால்பின்களையும் அமைதியான கடலையும் ரசிக்கும் ரித்து..

மஸ்கட்டில் அய்யா அப்துல் கலாம்..

திரு அப்துல் கலாம் அய்யா கடந்த வார இறுதியில் (வெள்ளி சனி) மஸ்கட் வந்திருந்தார்.. இந்தியன் சோசியல் கிளப்பின் தமிழ்ச்சங்கத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட “அதிக மதிப்பெண் பெற்றோருக்கான பரிசளிப்பு விழாவிற்க்கு தலமை தாங்கி பரிசு வழங்கவே அன்னாருடைய மஸ்கட் பயணம்..

அப்துல் கலாமை தெரிய வந்து எவ்வளவு வருடங்கள் ஆயிற்று என்று தெரியவில்லை.. ஆனால் அவர் பெயர் எனக்கு அறிமுகமானது ஆங்கில பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தியின் மூலமே.. “விங்ஸ் ஆப் ஃபயர்” என்று புத்தகம் வந்திருக்கிறது அதை எழுதியவர் ஒரு விஞ்ஞானி அதுவும் “ஏவுகனை, சாட்டிலைட்” விஞ்ஞானி என்று படித்ததுமே அவர் பாலும் அந்த புத்தகத்தின் மீதும் ஒரு ஈர்ப்பு.. (அன்ற் அவர் ஒரு சாதாரன விஞ்ஞானி) .. அதன் முக்கிய காரணம்.. எனக்குள் இருந்த “விமாணி” கனவும்.. விமானம் செயற்கை கோள் மற்றும் ஏவுகனைகளின் மீதிருந்த (இருக்கும்) ஆர்வமுமே..

அன்று படித்தது முதல் அவர் குறித்த கிடைத்த எல்லா செய்திகளையும் சேகரிக்கத் துவங்கினேன்.. மீண்டும் அவர்பால் ஒரு ஒட்டுதல் ஏற்பட்டது அவரும் என் ”மாவட்டத்துக்காரர்” என்று அறிந்ததும்.. புத்தகம் பற்றி அறிந்து இருந்தும் அதை வாங்கி படிக்கவே பல வருடங்கள் ஆனது.. பின் அவருடைய அனைத்து புத்தகங்களையும் வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது..

இன்றும் என்றும் என் ஆஸ்தான நாயகர் மற்றும் உயர்ந்து நான் வியக்கும் மனிதர்.. இத்துனை நாட்களுக்கு பிறகு இன்று நேரில் இங்கு மஸ்கட்டில் சந்திக்கவும் அவர் உரையை கேட்கவும் ஒரு வாய்ப்பு கிட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சி..

குறித்த நேரத்தில் நிகழ்ச்சி துவங்கி நடத்தி முடிக்கும் மஸ்கட் தமிழ் சங்கத்தின் ” நேர மேலாண்மைக்கு ” இந்நிகழ்ச்சி மட்டும் விதிவிலக்காகுமா என்ன? மிகச் சரியாய் 6 மணி என்று அழைப்பிதலில் இருந்த அதே நேரத்தில் நிகழ்ச்சியும் தொடங்கியது..

முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயான இன் நிகழ்ச்சி அப்துல் கலாம் அவர்களின் சிறப்புறையுடன் இனிதே நிரைவடந்தது.. அவரின் முழுப்பேச்சுமே அனைவருக்கும் ஒரு எழுச்சியையும் தாக்கத்தையும் ஏற்ப்படித்தியது என்பதில் இருவேரு கருத்து இல்லை.. ..

I am writing whatever is in my memory!!
He started the show quoting..

Dear Friends
And continued the same “ friends” throughout his speech.. He started with a welcoming and thanking notes for all the dignitaries.

And immediately moved on to get on with the kids. The first one has brought smiles and sense to every single one in the auditorium. Dr Kalam started with a pledge asking all the kids to pledge and practice, the pledge is,

I will make my mother smile every day!!
Smile in a mothers brings a hormonal home and that is the only thing that can bring a lot back to country when it measured in terms of macro level.

Then he asked the students, tell me one thing that should be nurtured at all times, starting from yong age, there were plenty of answers from hardwork, honesty, etc.. but he choose the word “ righteousness” !! Then went on to say what it means in real life..

Dr kalam continued saying “We should have Righteousness in our heart!!! That's what can bring positive change in the society. Righteousness must be brought in to each child and it can only be done by the religious parents and teachers. Righteousness can only bring goodness in yourself, there by goodness in your home and there by goodness in your street and city and it goes on till the entire world.

I had a dream at my very younger age, while the teacher was teaching us about the flight of a bird, the quest and dream for knowing how its flying and the ignite given by the teacher has only let me grow up and up.

The parents and teachers are the first one who has to bring out and inspire the kids and are responsible for every kids prospering.

And then finally..

Small Aim is a Big Crime!!

So AIM high and big.. you can do it!!

ரித்துவின் மூன்றாவது பிறந்த நாள்

ரித்துவின் மூன்றாவது பிறந்த நாள் அன்று வீட்டில் எடுத்த புகைப்படங்கள்..
பார்ட்டியில் எடுத்த புகைப்படங்கள் விரைவில்..




ரித்துவிற்க்கு பிறந்த நாள் பரிசு....

ரித்துவின் பிறந்த நாள் விழா நேற்று இரவு நடந்தது .. வந்திருந்த பரிசுகளில் மிகவும் முக்கியமானது இது..

ஷ்ருதி அவளே தன் கைப்பட செய்து ரித்துவிற்க்கு அளித்த வாழ்த்து அட்டை..



ஷ்ருதிக்கும் கோகுல்க்கும் ரித்துவின் நன்றிகள்..



பிறந்த நாள்..

இன்று தனது மூன்றாம் பிறந்த நாள் காணும் ரித்துவிற்க்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அம்மச்சி, அப்பச்சா, மாமா, சித்தப்பா, நண்பர்கள் மற்றும் அனைவரின் இனிய “பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதங்கள்”

புதிய புதிய உயர் சிகரங்களை எட்டவும்..
என்றும் மகிழ்ச்சியுடனும்..

உலகின் ஆச்சரியங்களை சாதூரியமாய் எதிர்கொண்டும்...
வாழ்க.. வளர்க.. பல்லாண்டு..


ரித்துவின் முதல் ”மொட்டை”..

ரித்துவிற்க்கு முதலில் மொட்டை அடித்திருந்த பொழுது எடுத்த புகைப்படங்கள் இவை.. விடுமுறைக்காக சென்னை வந்த பொழுது ரித்துவின் மாமாவே வீட்டில் அடித்து விட்ட மொட்டை தான் இது.. அப்பொழுது ரித்துவிற்க்கு 1 வயதும் 2 மாதங்களும் முடிந்திருந்தது.. எங்கே அழப் போகிறாளோ என்று நாங்கள் எல்லாம் நினைத்துகொண்டிருந்த பொழுது மிக அழகாக ”மொட்டை ..மொட்டை ” என்று தன் தலையையே தடவிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள் ரித்து..

இந்த புகைப்படங்கள் சிரிது நாட்கள் கழித்து எடுக்கபட்டவை..








ரமதான் விடுமுறை.. 2009

கடந்த ரமதான் விடுமுறையில் சென்ற சுற்றுலாவின் புகைப்படங்கள் இவை..

இது நாங்கள் திரும்பி வரும்பொழுது ஒரு யாருமற்ற தனியான கடற்கரையில் எடுத்த புகைப்படம்.. காரை விட்டு இறங்கியதுமே ரித்து கடல் நீருக்குள் செல்ல வேண்டும் என்றதும்.. அவள் கைப்பிடித்து கடல் அலை கால் நனைக்குமாறு சிறிது தூரம் நடந்து சென்றோம்..

வாழ்வின் எனது நினைவுகளிலேயே மிகவும் நேசிக்கும் சில நிமிடங்கள்.. யாருமற்ற கடற்கரையில் ரித்துவின் கைபிடித்து இருவரும் நடந்து சென்ற அந்த சில நிமிடங்கள்.. இனி என்றும் மறக்க முடியாததாய்..

நன்றி நிரு.... அந்த நிமிட்ங்களை மறக்காமல் புகைப்படத்தில் மீட்டெடுத்ததுக்கு...





ரித்துவின் நிகழ்படப் பதிவுகள்.. 2

ரித்து அடிக்க வருகிறாள்..




இது எங்கள் வீட்டுக்கு முன்புறம் உள்ள ரோட்டில் ரித்து சைக்கிள் ஓட்டும் பொழுது மொபைல் போனில் எடுத்த வீடியோ..

ரித்துவின் நிகழ்படப் பதிவுகள்..1

ரித்து வீட்டில் அவளுக்கான கிட்டாரில் வாசிக்கும் பொழுது அவளின் அம்மா எடுத்தது..





இது கப்பலில் எகிப்து பயனத்தின் போது எடுத்தது.. எவ்வளவு கோபம் பாருங்கள்.. :)




இது எங்களுடைய எகிப்து பயணத்தின் போது ரித்து அஸ்வான் விமானநிலையத்தில் எங்களை எல்லாம் அவள் பின் ஓட வைத்தபொழுது எடுத்தது.. விமானத்திற்க்காக காத்திருந்த பொழுது எடுத்தது இது அங்கு இருந்த அனைவரையும் ரித்து வின் பின் ஓட வைத்த நிகழ்ச்சியும் இது..



ரித்து அப்பொழுது ஒன்பது மாத குழந்தை.. ரித்து தான் தனியே நடப்பதில் அடைந்த மகிழ்ச்சியை இந்த வீடியோ காட்டுவதாக அமைந்த்துள்ளது என்றால் மிகை இல்லை.

அப்பாவிற்க்கு.. அப்பாவிடமிருந்து..

நீண்ட நாட்களாக எழுத நினைத்தது இன்று தான் எழுத முடிந்தது.. என் பிறந்த நாள் என்றாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவது, எனக்கு கிடைக்கும் புதிய உடைகள் தான்.. எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து படித்து முடித்து வேலையில் சேரும் வரை வந்த எல்லா பிறந்த நாட்களுக்கும் புதிய உடைகள் கிடைத்திருக்கின்றன..

அதே போல் பிறந்த நாள் என்றாலே வீட்டிலும் சரி நண்பர்கள் வட்டத்திலும் சரி, பள்ளியிலும் சரி அன்று முழுவதுமே ராஜ உபசரிப்பு தான்.. எதற்க்கும் திட்டு கிடையாது, எது இரவல் கேட்டாலும் தருவார்கள், கோபமாக கூட பேச மாட்டார்கள்.. எல்லாவற்றிற்க்கும் காரனம்“ பிறந்த நாளன்று செய்வதை அந்த வருடம் முழுவதும் செய்வார்கள்” என்ற நம்பிக்கை தான்.. கண்டிப்பாக எல்ல நண்பர்களுக்கும் அன்று இனிப்போ, சாக்லேட்டோ கொடுக்க தவறியதில்லை..

இதில் சிறப்பு என்னவென்றால் எங்கள் ஊரிலும் சரி உறவினர் வட்டத்திலும் சரி யாரும் பிறந்த நாள் கொண்டாடுவதென்பது என்று எதுவும் கிடையாது. ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் அப்பா வேறு எதற்க்கு புது உடைகள் எடுக்கிறாரோ இல்லையோ ஆனால் நான், தம்பி மற்றும் தங்கை என எங்கள் மூவர் பிறந்த நட்களுக்கும், அவர் அவர் பிறந்த நாட்களில் புது உடைகள் கட்டாயம் எடுத்து தந்து விடுவார்..

ஆனால் இது வரை அப்பாவிற்க்கென்று எந்த பிறந்த நாளையும் நாங்கள் கொண்டாடியதாய் நினைவு இல்லை. அவரும் இது பற்றி சொன்னதும் இல்லை கேட்டதும் இல்லை... எல்லாம் இப்ப “அப்பாவனதும்” தான் தெரிய வருது!!! இவ்வளவு நாட்களாக இது பற்றி ரெம்பவே யோசிக்காமலிருந்த எனக்கு இதை உனர்த்தியதும் இந்த “தகப்பன்மை” தானோ ?

நன்றி அப்பா அனைத்திற்க்கும்..

டால்பின் வாட்ச்..

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (இன் நாள் தான் இங்கு ஞாயிறு போல எல்லோர்க்கும் வார விடுமுறை) எனது அலுவலக நண்பர்கள் எல்லம் சேர்ந்து ஏற்பாடு செய்த சிறு குடும்ப சிற்றுலா தான் “ டால்பின் பார்த்தல்” ..

இரண்டு நாட்களுக்கு முன் தான் எல்லாமே உறுதியானது.. மொத்தம் 25 பேர். சரியாய் வெள்ளி காலை 10.00 மணிக்கு படகு துறைமுகத்தில் அனைவரும் ஆஜராகவேண்டியது என்று முன்னரே அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது..

சிற்றுலா உறுதியானதில் இருந்தே ரித்துவிற்க்கு டால்பின் பார்க்க போகிறோம் என்று அடிக்கடி நினைவுறுத்தி ஆவலை அதிகப்படுத்தியிருந்தோம்.. தண்ணீர் என்றாலே ரித்துவிற்க்கு பயங்கர சந்தோஷம்.. படகு, கடல், டால்பின் என்றதும் சொல்லவே வேண்டாம்.. அந்த இரண்டு நாளா எதாது செய்துட்டு இருக்கும் போது திடிர்னு வந்து.. ”அச்சா டால்பின்” என்று கன்னை மேலே தூக்கி காண்பிப்பாள்.. நாங்களும் நாளைக்கு என்று சொல்லி சமாளித்து வந்தோம்..

வெள்ளிக்கிழமையும் வந்தது.. காலையில் வெகு சீக்கிரமாகவே (8.30 க்கே) எழுந்து எல்லோரும் தயாராகி வீட்டை விட்டு கிளம்ப 9.50 ஆகி விட்டது. ஆனால் ரித்து மட்டும் இன்னும் தூக்கத்திலேயே.. என்னடா இது இவளுக்காக டால்பின் பார்க்கலாம்னு இருந்தால் கடைசி நேரத்தில இப்டி தூங்கிட்டு இருக்காளே என்று ஒரே பதட்டம்.. சரி பரவாயில்லை என்று அவளை தயார் செய்து, தூக்கத்தோடே அழைத்துச் சென்றோம்..

படகுத்துறை வீட்டிலிருந்து பத்து நிமிட பயண தூரம் தான் என்றாலும் இறுதிநேர பதட்டத்தை தவிற்க்க முடியவில்லை.. படகுத்துறை சென்று சேர 10.10 ஆகிவிட்டது.. ஏறக்குறைய அதே சமயத்தில் எல்லோரும் வந்த்து சேர.. 10.30 க்கு குறித்த நேரத்தில் இரண்டு படகுகளில் டால்பினை பார்க்கும் பயணம் தொடங்கியது..

அனைவரும் படகில் ஏறி புறப்படவும் .. ரித்து துக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளவும் சரியாய் இருந்தது.. கடற்கரையிலிருந்து ஒரு இருபது நிமிட கடல் பயனம்.. ரித்து எல்லாவற்றையும் பார்த்து ” அச்சா போட்” “ அச்சா வெள்ளம்” என்று பேச தொடங்கினாள்..

இருபது நிமிட கடலினுள் படகுப்பயனத்திற்க்குப்பின் டால்பின்கள் இருக்கும் இடம் வந்து சேர்ந்தோம்.. நிறையவே டால்பின்கள் அன்று கானக்கிடைத்தன.. ரித்துவும் அச்சா பிஷ் பிஷ் என்று சொல்லியே மீன்களை கண்டு கொண்டிருந்தாள்.. டால்பின்கள் கூட்டம் கூட்டமாக அங்கும் இங்குமாக படகின் இரு புறத்திலும் சென்று கொண்டிருந்தன.. சில நன்கு துள்ளி குதித்து சென்றன..

ரித்துவும் எல்லோரும் சொல்வதைக்கேட்டு அச்சா “டால்பின்” என்று சொல்ல ஆரம்பித்தாள்.. ரித்துவின் டால்பின் ஆர்வம் எல்லாம் ஒரு பத்து நிமிடம் மட்டுமே.. பின் அவளுக்கு டால்பின்களை கான அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் அச்சா “லெட்ஸ் கோ டு ரித்து கவுஸ்” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.


படகோட்டியோ ஒரு இருபது நிமிடம் அப்படியே படகை மிதக்கவிட்டு எல்லோரும் நன்றாக டால்பின்களை பார்க்க ஆவன செய்தார்.. அனைவரும் எவ்வளவோ முயன்றும் டால்பின்கள் கடல் நீருக்கு வெளியே குதிப்பதையும் துள்ளுவதையும் மிக சரியாக புகைப்படம் எடுக்க முடியவில்லை.. ஆனால் எடுத்த வீடியோக்கள் எல்லாம் எதோ பரவாயில்லை.. சரி வந்தவரை போதும் என்று அனைவரும் திரும்ப ஆயத்தமானோம்... வரும் வழியிலும் சில கடற்கரை இடங்களையும், டைவ் செண்டர்களையும் சுற்றிக்காட்டியே அனைவரையும் அழைத்துவந்தார் எங்கள் படகோட்டி..

கடலில் இருந்து வெளியில் வந்து வாகனத்தில் ஏறுவதற்க்காக சென்றபொழுதுதான் தெரிந்த்தது எவ்வளவு வெயில்.. வெப்பம் என்று.. இந்த வெயிலில் வேறு எங்கு செல்வது என்று...நேராக வீட்டுக்கு விடு ஜூட்...

தேர்தல்… இங்கேயும்..!!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, முதன் முதலில் எனக்கு தேர்தலில் வாக்களிக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. இந்த பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது மஸ்கட் தமிழ்ச் சங்கம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த மஸ்கட் தமிழ் சங்கத்தின் வரலாற்றில், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை.

இந்த தேர்தலில் சிறப்பு என்னவென்றால், என் முதன் முதல் வாக்களிப்பில் எனக்கு நானே வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது தான்.. (தேர்வாகவில்லை என்பது வேறு விஷயம்!). அங்கு வந்த சில தமிழர்களை - வயதில் மிகவும் மூத்தவர்க்ள் சிலரும் அடக்கம்- சந்தித்து பேசியதில் கிடைத்த தகவல் என் போன்று பலருக்கும் இது தான் முதல் வாக்களிக்கும் வாய்ப்பாம். வாக்களிக்க வந்த எல்லோருமே மிகுந்த ஆவலோடு வந்து வாக்களித்தனர், மொத்த வாக்குப்பதிவு 81%.

மஸ்கட்டை ஏமாற்றிய திரு. SP பாலசுப்ரமண்யம்..!

கடந்த எப்ரல் 3ம் தேதி திரு.SPB மற்றும் சித்ரா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சிக்கு திறந்தவெளி அரங்கில் (ஆம்பி தியேட்டர்) மஸ்கட் தமிழ் சங்கம் அதன் ஆண்டு மெகா நிகழ்ச்சியாகவும் அவர்களுக்கு ” வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்” வழங்கும் விழாவாகவும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.. நிகழ்ச்சிக்கு “ஒரு பொன் மாலைப் பொழுது” என்றும் பெயர் கொடுத்திருந்தனர்..

ஒரு மாதத்திற்க்கு முன்பிருந்தே மஸ்கட் வாழ் தமிழர்கள் மற்றும் தென் இந்திய மக்களிடையே இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இருக்காதா பின்னே? வருபவர்கள் என்ன சாதரனமானவர்களா? கின்னஸ் சாதனை, தேசிய விருதுகள், மாநில விருதுகள், ஃபிலிம் பேர் விருதுகள் என வாங்காத விருதுகளே இல்லையே.. எத்துனையோ வருடங்களாக தமிழ் சினிமாவில் சிறந்த பின்னனி இசை பாடகர்களாய் திழ்கிறார்கள், கண்டிப்பாக நிகழ்ச்சி களை கட்டும் என்று இங்குள்ள அனைவரும் எதிர்பார்த்திறுந்தோம்.. இன்னும் சொல்ல போனால் எனக்கும் எனது துனைவியாருக்கும் ... என்றால் மிகவும் பிடிக்கும்.. அவருடைய பாடல்கள் இல்லாமல் எந்த கார் பயனமும் இருக்காது.. இதே போல் எத்துனையோ பேர் ஆவலுடன் எதிர்பார்த்திறுந்தோம்.

மேலும் நிகழ்ச்சி மஸ்கட் தமிழ் சங்க உறுப்பினர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் மட்டுமே என்ற அறிவுப்பு வேறு அனைவரது எதிர்பார்ப்பையும் ஆவலையும் பண்மடங்கு உயர்த்தியிருந்தது..(சாதரனமாக இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல விலைகளில் “டிக்கெட்” விற்பனை இருக்கும்..)


எதிர்பார்த்த ஏப்ரல் 3 ம் வந்தது.. நிகழ்ச்சியும் சரியான குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியது (மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் சிறப்பு இது.. எந்த நிகழ்ச்சியானாலும் குறித்த நேரத்தில் துவக்குவது..)

திரு.SPBயும் சித்ராவும் வந்திருந்தனர். அரங்கு நிறைந்த 6500க்கும் குறையாத ரசிகர்கள் கூட்டம்.. முதலில் இருவருக்கும் ஒமான் நட்டிற்க்கான இந்தியத்தூதர் ” வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்" இருவருக்கும் வழங்கி கௌவ்ரவித்தார்.


SPB நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கியதையும் மிக கட்டுக்கோப்பான ரசிகர் கூட்டத்தையும் சிலாகித்துவிட்டு.. ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்துடன் முதல் பாடலாய் ”ஒரு பொன் மாலைப் பொழுது” உடன் நிகழ்ச்சியை துவங்கினார் ”

அடுத்ததாய்.. “சங்கரா பரனமு..” வுடனும் அடுத்ததாய் சித்ரா அவர்களின் பாடல்களுடனும் நிகழ்ச்சி தொடர்ந்தது.. 1/2 மணி நேரம்.. 1 மணி நேரம்.. நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் தொடவே இல்லை.. திரு.SPB பாடிய அனைத்து பாடல்களும் சாதரன மக்களிடம் மிகவும் பிரசித்தி பெறாத, சில சங்கீத சிறப்புடைய பாடல்கள் மட்டுமே. அவருடைய பிரசித்தி பெற்ற ரஜினி பாட்டுகள் இல்லை, அவரின் விருதுகள் வாங்கிய பாடல்கள் இல்லை, ரசிகர்களை எழுந்து ஆடவைக்கும் பாடல்கள் இல்லை.. என்னாயிற்று SPB? “காதல் ரோஜாவே” எங்கே? “தங்கத்தாமரை நிலவே “ எங்கே? ” ஒருவன் ஒருவன்” எங்கே? இன்னும் நிறைய பாடல்கள் “ எங்கே எங்கே ” என்று கேட்கவேண்டியதாகிவிட்டது..


ஆனால் சித்ராவோ மக்கள் ரசித்த, விருது வாங்கிய அவருடைய அனைத்து பாடல்களையும் பாட தவறவில்லை..

திரு.SPB யின் பாடல் தேர்வால் - அவருக்கு பிடித்த பாடல்கள், ரசிகர்களை அதிகம் கவராத - ரசிகர்களிடம் அத்துனை வரவேற்பு இல்லை. நாம தான் ரெம்ப நல்லவங்களாச்சே, நிகழ்ச்சி துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே (8 மணிக்கே) கூட்டம் கூட்டமா ரசிகர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்து விட்டனர்.. சாதரனமா இது போன்ற நிகழ்ச்சிக்கு 10 30 வரை எப்பவும் ரசிகர்கள் அமர்ந்த்திருப்பர் (கடந்த ஆண்டு மனோ, சுஜாதா, மனோரமா - வின் இது போன்ற நிகழ்ச்சி 11 மணி வரை அரங்கு நிரைந்து நடந்தது..)

இதில் வருத்தபட வேண்டியது என்னவென்றால், ” ராஜா மாதிரி உட்கார்ந்து கேளுங்கள் நான் உங்கள் அடிமை போல பாடுகிறேன்“ என்று ரசிகர்களிடம் கூறிய திரு.SPB ரசிகர்கள் ”ரஜினி பாட்டு, SUPERSTAR பாட்டு” என்று கூறியபோதெல்லாம்.. எதோ அவருக்கு கேட்காதது போல நடந்து கொண்டதுதான்.. ரசிகர்கள் எதாவது வெகு நேரம் கழித்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. “ நாங்கள் மற்றும் இசைக்கருவிகளுடன் பயிற்ச்சி செய்துவந்த பாடல்கள் மட்டுமே பாட முடியும்.. ” என்று எதோ அனைவருக்கும் ஒரு சப்பைக்கட்டு கட்டினார்.. !! இதிலும் காமெடி!! இன்னிசை குழுவோ “ சாதக பறவைகள்” அவர்களோ திரு.SPB பாடிய ரஜினி பாட்டுக்களையும், அவரின் ஹிட் பாடல்களையும் பாட தாயாராய் இருக்கும் பொழுது, திரு.SPB மட்டும் அவருக்கு பிடித்த பாடல்களை மட்டும் தொடர்ந்து பாடியது ஏனோ?.. திரு.SPB அவர்களே ரஜினியுடன் எதும் கோவமா தங்களுக்கு, அப்படியே இருந்தாலும் காண்பிக்க கூடிய இடம் இதுவல்லவே?!

திரு.SPB அவர்களே தங்களுக்கு வேண்டுமானால் இந்நிகழ்ச்சி பத்தோட பதினொன்றாய் இருக்கலாம்.. ஆனால் என்போன்ற உங்கள் மஸ்கட் வாழ் ரசிகர்களுக்கு உங்கள் பாடல்களை நேரில் கேட்க அரிதாய் வாய்த்த ஒரு நிகழ்ச்சி.. இப்படி ஏமாற்றலாமா?? எத்துனை மேடைகளை கண்டவர் நீங்கள்? எத்துனை பாடல்கள் பாடியவர் நீங்கள்? உங்களுக்கு தெரியாததா?? ரசிகர்களுக்கு என்ன வேண்டும் என்று?? இப்படி ஏமாற்றலாமா எங்களை நீங்கள்????



பி.கு.

நிகழ்ச்சியின் முடிவில் நண்பர் ஒருவரின் காமெண்ட்.. “ இங்க கேட்ட இந்த பாடல்கள் இருக்கும் கேஸட், இப்போ சன், ராஜ், ஜெயா டிவில கூட போடறது இல்லியேப்பா!! ”

காலம் மாறுதா.. வயாசாகுதா.!!?

கடந்த வியாழனன்று கடைக்கு சென்று இருந்தோம்.... ரித்து எல்லாம் பார்த்து கொண்டே வந்தவள்.. VICKS மாத்திரை பார்த்த உடனே எனக்கு VICKS வேணும்னு ஒரே அடம்.. சரிம்மா இரு அப்பா பில் போட்டு வாங்கி தரேன்னு சொன்னா.. " நோ பில்.. ரித்து நோ பில்" னு ரித்து ஒரே அடம்.. அதாவது ரிதுக்கு வாங்கினால் பில் கொடுக்க வேண்டாம்னு மேடம் சொல்றாங்க!!! சரி னு சொல்லி அவ கைல VICKS எடுத்து கொடுத்துட்டு நான் மட்டும் சென்று கௌன்டர் ல VICKS கு பில் கட்டினேன்.. சிறிது நேரத்தில்.. எனக்கு சில பொருட்கள் வாங்க கையில் எடுத்ததும் ரித்து சத்தமாக.. " அச்சா பில்.. பில் first " என்று கூறவும்.. ஒரே சிரிப்பு தான் எனக்கு.. அவளோட சாக்லேட், VICKS, எல்லாம் பில் வேண்டாமாம்.. நான் வாங்கினா மட்டும் உடனே பில் கொடுக்கணுமாம்.. நல்லா இருக்குல்ல??

ரித்து வை நான் கையில் தூக்கி கொண்டு, எல்லாம் வாங்கிட்டு பில் போட்டுட்டு இருக்கறப்போ.. அந்த cahsier மிஷன் முன்னாடி ஒரு சிறு குழந்தையின் வாட்ச் இருந்தது.. ரித்து அதை கைகாட்டி " அச்சா பேபி வாட்ச்" என்றால்.. சரி நானும் அவள் கேட்கிறாளே என்று அந்த வாட்ச் எங்க இருக்கு எனக்கும் ஒன்று வேண்டும் என்று கேட்டேன்.. அவரோ சாரி சார் இது இங்க இல்ல.. ஷாப்பிங் வந்தவங்க யாரோ விட்டுடு போய்டாங்க அதான் எடுத்து வச்சிருக்கோம் என்றார்!

உடனே சிறிது வினாடிகளில் கடைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பரவாயில்லை இந்த வாட்ச்சை நீங்களே எடுத்துக்கோங்க என்றார். நானோ பரவாயில்லை வேண்டம் அவள் இதை வாங்க மாட்டாள் இதே போல் வேறு ஒன்று தான் அவளுக்காக வேண்டும் என்றேன். உடனே அவரே பரவாயில்லை எடுத்துகோங்க என்று ரித்து கையில் எடுத்து கொடுத்தார். ஆனால் உடனே ரித்து வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டாள்.. !! எனக்கும் மனைவிக்கும் ஒரே ஆச்சரியம், எப்படி ரிதுவுக்கு புரிந்தது என்று..!! இத்துணைக்கும் எங்கள் இருவருடய உரையாடல் முழுதும் நடந்தது " ஹிந்தி" யில்..

அவள் புரிந்து வேண்டாம் என்றளா? .. இல்லை எனக்கே எனக்கென்று புதிதாய் தான் வேண்டும், அதனால் இது வேண்டாம் என்று வேண்டாம் என்றாளா? எனக்கும் இன்னும் சரியாய் தெரியவில்லை. இரண்டில் ஒன்று எதுவாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என்று தோன்றுகிறது.


எது கொடுத்தாலும் சரி னு வாங்கிட்டு இருந்த என் காலம் எங்கே..!! எனக்கு என்றால் " இது தான் " வேண்டும் என்று தெளிவாக இருக்கும் இக்கால குழந்தைகள் எங்கே..!!

அப்பா பொண்ணு!

பெண் குழந்தை என்றாலே எல்லாரும் அப்பா பொண்ணுனு தானே சொல்வாங்க ஆனா இவங்க (ரித்து) இதில் மாறுபட்டவங்க. ரித்து எப்பொழுதுமே அம்மா பொண்ணு தான்..

முதல் நாளில் இருந்தே அப்பா எப்பவுமே ஏதாவது தேவைக்கு மட்டுமே.. :)உயரத்தில் இருக்கும் விளையாட்டு பொருள் எடுக்க.. மேலே தூக்கி போட்டு பிடித்து விளையாட.. டிவி யில் மிக்கியும் டோராவையும் அம்மாவை மீறி பார்ப்பதற்கு, என்று அவள் தேவைக்கு மட்டுமே அப்பா செல்லமாக இருப்பாள்.. :)

கடந்த வாரம் அவங்க அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லாததால் சில நாள் நானும் கூடவே வீட்டில் இருக்கவேண்டியதாகியது. அந்த அணைத்து நாட்களும் ரித்துக்கு எல்லாமே அப்பா தான்.. அம்மாவே பால் எடுக்க சென்றால் கூட.. நோ மம்மி அச்சா வே பால் தரட்டும் என்றாள்.. நானும் ரெம்ப மகிழ்வோடு எல்லா நாட்களும் ரிதுவின் விளையாட்டு மற்றும் வேலைகளை உடன் இருந்தே பார்த்துக்கொண்டேன். .. இனிமேல் ரித்து முழுதுமாய் அப்பா செல்லம் தான் என்று எண்ணியிருந்தேன்..

என் இந்த எண்ணம் இரண்டு நாட்கள் வரை மட்டுமே நீடித்தது.. 3 ம் நாளில் இருந்து மீண்டும் ரித்து அம்மா பொண்ணு தான்.. !! நானகவே பால் எடுக்க சென்றால் கூட.. நோ அச்சா .. பால் அம்மாவே எடுக்கட்டும் என்று.. :)

என்ன தான் இருந்தாலும், செய்தாலும் தந்தை.. தாயாக முடியாது இல்லியா?

உண்மையாகவே அவளை முழுதும் நானே பார்த்துக்கொண்ட அந்த சில நாட்கள் சிரமமானவையே.. அது ஒரு நல்ல பாடமாகவும், வீட்டையும் குழந்தையையும் கவனிப்பதில் மனைவியின் சிரமங்களை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே அமைந்தது!!


வேலைக்கும் சென்று வீட்டை மற்றும் குழந்தைகளையும் கவனித்து கொள்ளும் அணைத்து அம்மாக்களுக்கும் ஒரு SALUTE !!!

வீட்டிலேயே முழு நேரமும் இருந்து வீட்டை மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ளும் அணைத்து அம்மாக்களுக்கும் இரண்டு SALUTE!!!

முதல் பிறந்த நாள்..


இது ரித்து வின் முதல் வருட பிறந்த நாள் அன்று அவளின் அம்மாவே எடுத்தது. இந்த புகைப்படம் கண்டால் எப்போவும் ரித்துக்கு ஒரே மகிழ்ச்சி தான்..

Rithus First Year


View Project at Shutterfly

என்று முடியும் இந்த கொலைகள்..

நீண்ட நாட்களாகவே மனதில் உறுத்திகொண்டிருக்கும் ஒரு விஷயம்!! இலங்கை கொலைகள்.. " தமிழர்கள் " என்று அரசியல் செய்ய விரும்பவில்லை ஒரு சாதரண மனிதனாக.. ஒரு சாதரண மனிதனுக்கு நடக்கும் இந்த அடக்குமுறை, வன்முறை மேல் கொண்ட இந்த வெறுப்பு..! அவர்கள் செய்த தவறு தான் என்ன? ஒன்றுமே தெரியாமல் துப்பாக்கியின் தோட்டாவிற்கும் "கிளஸ்டேர்" குண்டுகளுக்கும் அநியாயாமாய் உயிரையும் உறுப்புகளையும் இழந்தோர் / இழப்போர் எத்துனை எத்துனை..

முடிவில் இந்த இலங்கை அரசாங்கம் மற்றும் ஈழப் போராளிகள் என்ன தான் செய்ய போகிறார்கள் உயிர் இழந்த மனிதர்களுக்கும் அதைவிட "உறுப்புகள்" இழந்த மனிதர்களுக்கும் .. இன்னும் எத்துனை நாட்களுக்கு இந்த முடிவே இல்லாத சண்டைகள்? யாருக்காக?

இதே வேறு நாட்டில் நடந்திருந்தால் உலகமே மொத்தமுமாய் உதவிக்கரம் கொடுத்து போரையே சமாதனத்திற்கு கொண்டு சென்றிருக்கும்.. இங்கு மட்டும் ஏன் இந்த பார முகம்? உயிர் இழந்தவர்கள் போதவில்லையா? இன்னும் எவ்வளவு உயிர் பலி வேண்டும்!!


மின்னஞ்சல் களிலும் இணையங்களிலும் கண்ட புகைபடங்கள் என்னை மிகவும் பாதித்தால் இதை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று தோன்றியதால் இந்த ஒரு குமுறல் மட்டும்!! இங்கு இப்பொழுது..

ரித்துவின் பழக்கத்திலுல்ல வார்த்தைகள் சில

ரித்துவின் தற்சமய பழக்கத்திலுல்ல வார்த்தைகள் வாக்கியங்கள் சில இங்கே..

அம்மா -
அப்பா -

அச்சா - அப்பாவை தான் இவ்வாறும் ..
அம்மச்சி - பாட்டி
அப்பச்சா - தாத்தா
uncle / மாமா - மாமாக்கு தான்..

அச்சா பொக்கு - அவளை நான் தூக்குவதர்க்கு ..

மானாம் - வேண்டாம்

வெள்ளம் / தண்ணீர் - நீர்

தூது - பால்

மாஸ்க் - மசுதிக்கு..

pussy cat - பூனைக்கு

போலாமா - வெளியே கிளம்ப தயாராகி கொண்டு இருக்கும்பொழுது
அவளுக்கு உடை இட்டதுமே உடனே கேட்கும் கேள்வி

அச்சா come here - எதையாவது என்னிடம் காட்டுவதற்கு.. அல்லது அவளுக்கு வேண்டியதை எடுத்து தர..

அச்சா gooo (high pitch) - அவள் செய்யும் எதையாவது தடுக்கும் பொழுது..

அச்சா less go (lets go) - எங்காவது அவளை அழைத்து செல்ல..

pussy cat - பூனைக்கு

வாவோ சாச்சி - தூங்குவதற்கு..

அச்சா வாவோ சாச்சி - அப்பா தூங்கு என்று என்னை தட்டி கொடுக்கும்
போது,..

light வாவோ சாச்சி - பகலில் தெரு விளக்குகளை பார்த்து, அவை அணைந்து இருப்பதால்..

light எழுனிச்சு - இரவில் வெளியில் செல்லும்போது (இங்கு குளிர்கலமதலால் இப்பொழுது விரைவிலேயே இருட்டி விடுகிறது) எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்குகளை பார்த்து இவ்வாறு..

டுவி டுவி - பறவைகளாம் ...

மூ மூ - மாட்டிற்கு..

பௌ பௌ - நாயாம் ..

சிக்கன் - இது கோழி கறிக்கு :)

அவள் அடித்து நான் விளையாட்டாய் அழும் பொழுது - போட்டே அச்சா.. போட்டே அச்சா என்று ஆறுதல்.. :)

அச்சா தள்ளும் - ரித்து அப்பாவை அடிப்பாள்..


இன்னுமும் வரும்..

Rithu`s Day..

இது ரித்துவின் இரன்டாவது பிறந்த நாள் (14th நவம்பர் 2008). அவளுக்கு உடல் நிலை சரியில்லாததால் இந்த முறை பார்ட்டி ஏதும் இல்லை(Order of home minister). வெறும் கேக் order செய்து இங்கு இருக்கும் ஒரு ஷாப்பிங் சென்டரில் உள்ள குழந்தைகள் விளையாட்டு இடத்தில் வைத்து கேக் கட்டிங் நடந்தது. ரித்து குழந்தைகளுடன் விளையாடி களிப்புறவும் ஒரு மாற்றத்துக்காகவும் இங்கு பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்தோம்.. அங்கு இருந்த எல்லார்க்கும் ஒரு surpise மற்றும் எங்களுக்கும் ஒரு சந்தோசம்.. எல்லா குழந்தைகளுமே ' ஹாப்பி பிரத் டே பாடினார்கள்..அவளால் முடிந்த அளவு அவர்களுடன் ரித்துவும் சேர்ந்தே பாடினாள்..she was very happy to blow the candles off and cut the cake.. !!!

அதற்கு பின் அங்கேயே ரித்துவும் விளையாட ஆரம்பித்தாள்.. கேக் cutting- க்கு அப்புறம் விளயாட வேண்டியே அங்கு அழைத்து வந்து இருந்தோம்.. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடினாள் .. அந்த நேரத்து புகைப்படங்களே இவை..


கண்டிப்பாக ரித்து இதில் மகிழ்ந்திருப்பாள் என்றே எண்ணுகிறோம்..

சி(பி)றந்த நாள்..



ஜனவரி 3 எனது பிறந்த நாள்.. இதுவரை வந்த எல்லா பிறந்த நாள் போல தான் இருக்க போகிறது என்று இருந்தேன் .. ஜனவரி 2 இரவு வரை.. கிடைத்த பரிசுகள், 2 Formal shirts & Jeans from Niru, real surprise.. ( Thanks da CK ). பிறந்த நாளை இது வரை சென்ற பிறந்த நாட்களை விட சிறப்பக்கியது ரித்து..

எனக்கு அவளாகவே " அச்சா happy bathday to UUUUUUUUUU " சொல்லி ரெண்டு கன்னத்திலும் உம்மா கொடுத்து .. shake hand செய்து ஒரே அமர்க்களம் ... என்ன செய்தாலும் மழலை சொல் மற்றும் செயலின் மகிமையே தனி தானே?

அன்று இரவு கேக் எடுத்து candle எடுத்து வச்சதுமே " happy bathday to UUUUUUUUUU " என்று கத்தியை கையில் எடுத்துக் கொண்டாள்.. அவளே எல்லா candls யும் அனைத்து விட்டு.. மீண்டும் " happy bathday to UUUUUUUUUU " கேக்ல கத்தி வச்சு அவளே கட் பண்ண தொடங்கி விட்டாள்.. கத்தியை திரும்ப வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..

Thanks CKs for making this B`day something special...

Me with Rithu :)


Me with Rithu on the second day :)