பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நாட்கள் எவ்ளோ வேகமாக ஓடுகின்றது.. எதோ இன்று தான் பிறந்தது போல் இருக்கிறது.. ஆனால் ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டது..
இன்று போல் இன்புற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
செஸ்..


எனக்கு விபரம் தெரிந்து நான் செஸ் விளையாடுவது நான்காம் வகுப்பிலிருந்து என்று நினைக்கிறேன்.. முழு முதல் காரணம் அப்பா மட்டுமே. அப்பா தான் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் செஸ்ஸில் முதலிடம் இரண்டாம் இடம் என வெற்றி பெற்றுவருவார்.. அதுமில்லாமல் அவர் வீட்டில் இருக்கும் பொழுது படிக்காம இருக்க அவருடன் செஸ் விளையாட ஆரம்பித்தேன்..
முதலில் அப்பாவுடன் ஆட ஆரம்பித்த புதிதில் எல்லாம் அப்பா தான் வெற்றிபெறுவார், அப்புறம் நான் அழிச்சாட்டியம் பன்னி வெற்றி பெறுவேன் (அப்பா விட்டுக்கொடுத்துதான்..) ஆனால் ஒன்பதாம் வகுப்பிற்க்குப்பின் ஓரளவு நன்றாக ஆட கற்றுக்கொண்டுவிட்டேன்.. அப்பாவுடனான ஆட்டங்கள் மிக சுவாரசியமாகவும் கடினமாகவும் செல்லும்.. பின் கல்லூரியிலும், கொச்சின் அலுவலக்த்திலுமாக செஸ்ஸில் முதலாய் கொடி நாட்டிய வருடங்கள் பல.. 2000 வருடத்திலிருந்து செஸ்ஸை சுத்தமாக எந்த வடிவிலும் தொடமுடியவில்லை..
கடந்த முறை சென்னை வந்த பொழுது பிரதர் இன் லா லேப்டாப்பில் செஸ்ஸைக்கண்டு சிறிது நேரம் கம்யூட்டருடன் ஆடிக்கொண்டிருந்த பொழுது தான் ரித்து செஸ்ஸைக் கம்யூட்டரில் கண்டு ஆட ஆரம்பித்திருக்கிறாள்.. இந்த மூன்று மாதமாக கம்யுட்டரிலும் செஸ் போர்டிலுமாய் மேடம் விளையாடிக் கொண்ட்டிருக்கிறாள்..
பார்க்கலாம் எவ்ளோ நாள்ள மேடம் என்னை வெற்றிகொள்ளப் போகிறாள் என்று... மிகுந்த ஆர்வம் காட்டினால் மட்டுமே கண்டிப்பாக தேவையான எல்ல முயற்ச்சியும் பயிற்ச்சியும் ரித்துவிற்க்கு உண்டு.. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு அப்பாவின் பயிற்ச்சி நன்கு விளையாடி கல்லூரி அலுவலகத்தில் முதலாய் வருமளவிற்க்கு.... :)
மேலே இருக்கும் புகைப்படங்கள் இந்த மாதம் சென்னையில் ரித்து விளையாடிக்கொண்டிருந்த பொழுது எடுத்தது..
முதல் நாள் இன்று...
இரண்டு நாளாகவே ரித்து தயாரக தான் இருந்தாங்க பள்ளிக்கு செல்ல.. இன்று வரச் சொல்லியிருந்ததால் இன்றே எல்லாம் தயார் செய்து எடுத்து சென்று ரித்துக்கான பள்ளியில் சேர்த்தாகிற்று..
ரித்துவும் 3 1/2 மணி நேரம் பள்ளியில் இருந்துவிட்டு “ அழாமல்” நல்ல குழந்தையாய் வந்ததோடல்லாமல் நாளைக்கும் போகனும்னு சொல்லி இருக்காங்க..
இந்த பள்ளியில் சேர்ப்பதற்க்குள்ளாகா நடந்தவை எல்லாம் இனியொரு பதிவில்..
பள்ளி..
கடந்த மூன்று மாதமாக ரித்துவிற்க்கான பள்ளி எது என்று ஒரே தேடும் படலம் தான் என்னுடைய முக்கியமான வேலையாகிப்போனது! நவம்பர் 14 க்கு பின் துனைவியாரின் முழு நேர நினைவூட்டலால் இன்னும் தேடல் அதிகமாகியது... ஏற்க்கனவே நான் துனைவியிடம் சொல்லியிருந்தது இது தான்.. ரித்துக்கு பள்ளி என்பது அவள் மூன்று வயது கடந்ததும் மட்டுமே என்று.
அதனால் ரித்துவிற்க்கு மூன்று வயது ஆகும் வரை அவ்வப்போது அவர் நினைவுட்டி வந்தார் என்றாலும் கடந்த 1 1/2 மாதங்களாக மிகவும் அதிக முனைப்பெடுத்து ஒரு ஒரு பள்ளியாக (நர்சரி தான்)இருவரும் தேட ஆரம்பித்தோம்..
நினைத்ததும் உடனே கிடைத்துவிடுமா என்ன? வீட்டிற்க்கு அருகில் இல்லை, அல்லது இடவசதி சரியில்லை.. அல்லது குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள் இல்லை.... இப்படியாக ஒரு மாதம் ஓடி விட்டது.. சரி இருக்கறதுலயே பரவாயில்லததாக ஒன்றை தேர்ந்தெடுத்து (அதாங்க நம்ம ஊர்ல ஓட்டு போடறது மாதிரி) இரண்டு வாரத்திற்க்கு முன் ஒரு நல்ல நாள் பார்த்து அந்நாளில் ரித்துவினை சேர்த்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.
நர்சரி காலை 8 மணியிலிருந்து பகல் 12 வரை மட்டுமே..
அவர்களிடம் போனிலேயே என்ன என்ன வேண்டும் என்று கேட்டு முதல் நாள் இரவே எல்லம் எடுத்து வைத்து அவளிடமும் சொல்லியிருந்தோம்.. நானும் அலுவலகத்திற்க்கு விடுமுறை எடுத்திருந்தேன்.
இறுதியில் அந்த நல்ல நாளும் வந்ததும்.. நானும் ரித்துவின் அம்மாவும் 6 மணிக்கே எழுந்து ரெடியாகி காத்திட்டு இருக்கோம்.. ரித்து தான் எழுந்தபாடில்லை..
மணி 7 ஆச்சு..
8 ஆச்சு..
9 ஆச்சு..
ஊகூம்.. ரித்து தான் எழுந்திருக்கவே இல்லை.. சரி இதுக்கு மேல வேண்டாம்னு ரித்துவை நாங்களாகவே எழுப்பினாலும் மேடம் எழுந்திருக்கவே இல்லை..
இவ்வளவுக்கும் 2 நாளா அவதான் பள்ளிக்கு போகனும் ரித்து பள்ளிக்கு போகனும்னு அடம் பன்னிட்டிருந்தால்.. சரி அது சொல்லியாது எழுப்பலாம்னாலும்.. கடைசிவரை எழுந்திருக்கவே இல்லை..
சரி எதோ ரெம்ப மேடம் டயார்டா இருக்கனு நாங்களும் விட்டாச்சு.. கடைசியா ரித்து எழுந்தது 1 மணிக்கு.. எழுந்து கொஞ்ச நேரத்திலயே அப்பா வா பள்ளிக்கு போலாம்னு வேர அடம்.. ஹ்ம்ம்ம்ம்..
பள்ளி மூடின பின் பள்ளிக்கு போலாம்னா எப்புடி? மீதி இருந்த விடுமுறையை ரித்துவுடன் பார்க்கில் சென்று கேம்ஸ் விளையாடுவதில் சென்றுவிட்டது..
ரித்துவின் நிகழ்படப் பதிவுகள்.. 2
இது எங்கள் வீட்டுக்கு முன்புறம் உள்ள ரோட்டில் ரித்து சைக்கிள் ஓட்டும் பொழுது மொபைல் போனில் எடுத்த வீடியோ..
ரித்துவின் நிகழ்படப் பதிவுகள்..1
இது கப்பலில் எகிப்து பயனத்தின் போது எடுத்தது.. எவ்வளவு கோபம் பாருங்கள்.. :)
இது எங்களுடைய எகிப்து பயணத்தின் போது ரித்து அஸ்வான் விமானநிலையத்தில் எங்களை எல்லாம் அவள் பின் ஓட வைத்தபொழுது எடுத்தது.. விமானத்திற்க்காக காத்திருந்த பொழுது எடுத்தது இது அங்கு இருந்த அனைவரையும் ரித்து வின் பின் ஓட வைத்த நிகழ்ச்சியும் இது..
ரித்து அப்பொழுது ஒன்பது மாத குழந்தை.. ரித்து தான் தனியே நடப்பதில் அடைந்த மகிழ்ச்சியை இந்த வீடியோ காட்டுவதாக அமைந்த்துள்ளது என்றால் மிகை இல்லை.
டால்பின் வாட்ச்..
இரண்டு நாட்களுக்கு முன் தான் எல்லாமே உறுதியானது.. மொத்தம் 25 பேர். சரியாய் வெள்ளி காலை 10.00 மணிக்கு படகு துறைமுகத்தில் அனைவரும் ஆஜராகவேண்டியது என்று முன்னரே அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது..
சிற்றுலா உறுதியானதில் இருந்தே ரித்துவிற்க்கு டால்பின் பார்க்க போகிறோம் என்று அடிக்கடி நினைவுறுத்தி ஆவலை அதிகப்படுத்தியிருந்தோம்.. தண்ணீர் என்றாலே ரித்துவிற்க்கு பயங்கர சந்தோஷம்.. படகு, கடல், டால்பின் என்றதும் சொல்லவே வேண்டாம்.. அந்த இரண்டு நாளா எதாது செய்துட்டு இருக்கும் போது திடிர்னு வந்து.. ”அச்சா டால்பின்” என்று கன்னை மேலே தூக்கி காண்பிப்பாள்.. நாங்களும் நாளைக்கு என்று சொல்லி சமாளித்து வந்தோம்..
வெள்ளிக்கிழமையும் வந்தது.. காலையில் வெகு சீக்கிரமாகவே (8.30 க்கே) எழுந்து எல்லோரும் தயாராகி வீட்டை விட்டு கிளம்ப 9.50 ஆகி விட்டது. ஆனால் ரித்து மட்டும் இன்னும் தூக்கத்திலேயே.. என்னடா இது இவளுக்காக டால்பின் பார்க்கலாம்னு இருந்தால் கடைசி நேரத்தில இப்டி தூங்கிட்டு இருக்காளே என்று ஒரே பதட்டம்.. சரி பரவாயில்லை என்று அவளை தயார் செய்து, தூக்கத்தோடே அழைத்துச் சென்றோம்..
படகுத்துறை வீட்டிலிருந்து பத்து நிமிட பயண தூரம் தான் என்றாலும் இறுதிநேர பதட்டத்தை தவிற்க்க முடியவில்லை.. படகுத்துறை சென்று சேர 10.10 ஆகிவிட்டது.. ஏறக்குறைய அதே சமயத்தில் எல்லோரும் வந்த்து சேர.. 10.30 க்கு குறித்த நேரத்தில் இரண்டு படகுகளில் டால்பினை பார்க்கும் பயணம் தொடங்கியது..
அனைவரும் படகில் ஏறி புறப்படவும் .. ரித்து துக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளவும் சரியாய் இருந்தது.. கடற்கரையிலிருந்து ஒரு இருபது நிமிட கடல் பயனம்.. ரித்து எல்லாவற்றையும் பார்த்து ” அச்சா போட்” “ அச்சா வெள்ளம்” என்று பேச தொடங்கினாள்..
இருபது நிமிட கடலினுள் படகுப்பயனத்திற்க்குப்பின் டால்பின்கள் இருக்கும் இடம் வந்து சேர்ந்தோம்.. நிறையவே டால்பின்கள் அன்று கானக்கிடைத்தன.. ரித்துவும் அச்சா பிஷ் பிஷ் என்று சொல்லியே மீன்களை கண்டு கொண்டிருந்தாள்.. டால்பின்கள் கூட்டம் கூட்டமாக அங்கும் இங்குமாக படகின் இரு புறத்திலும் சென்று கொண்டிருந்தன.. சில நன்கு துள்ளி குதித்து சென்றன..
ரித்துவும் எல்லோரும் சொல்வதைக்கேட்டு அச்சா “டால்பின்” என்று சொல்ல ஆரம்பித்தாள்.. ரித்துவின் டால்பின் ஆர்வம் எல்லாம் ஒரு பத்து நிமிடம் மட்டுமே.. பின் அவளுக்கு டால்பின்களை கான அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் அச்சா “லெட்ஸ் கோ டு ரித்து கவுஸ்” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

படகோட்டியோ ஒரு இருபது நிமிடம் அப்படியே படகை மிதக்கவிட்டு எல்லோரும் நன்றாக டால்பின்களை பார்க்க ஆவன செய்தார்.. அனைவரும் எவ்வளவோ முயன்றும் டால்பின்கள் கடல் நீருக்கு வெளியே குதிப்பதையும் துள்ளுவதையும் மிக சரியாக புகைப்படம் எடுக்க முடியவில்லை.. ஆனால் எடுத்த வீடியோக்கள் எல்லாம் எதோ பரவாயில்லை.. சரி வந்தவரை போதும் என்று அனைவரும் திரும்ப ஆயத்தமானோம்... வரும் வழியிலும் சில கடற்கரை இடங்களையும், டைவ் செண்டர்களையும் சுற்றிக்காட்டியே அனைவரையும் அழைத்துவந்தார் எங்கள் படகோட்டி..
கடலில் இருந்து வெளியில் வந்து வாகனத்தில் ஏறுவதற்க்காக சென்றபொழுதுதான் தெரிந்த்தது எவ்வளவு வெயில்.. வெப்பம் என்று.. இந்த வெயிலில் வேறு எங்கு செல்வது என்று...நேராக வீட்டுக்கு விடு ஜூட்...
காலம் மாறுதா.. வயாசாகுதா.!!?
கடந்த வியாழனன்று கடைக்கு சென்று இருந்தோம்.... ரித்து எல்லாம் பார்த்து கொண்டே வந்தவள்.. VICKS மாத்திரை பார்த்த உடனே எனக்கு VICKS வேணும்னு ஒரே அடம்.. சரிம்மா இரு அப்பா பில் போட்டு வாங்கி தரேன்னு சொன்னா.. " நோ பில்.. ரித்து நோ பில்" னு ரித்து ஒரே அடம்.. அதாவது ரிதுக்கு வாங்கினால் பில் கொடுக்க வேண்டாம்னு மேடம் சொல்றாங்க!!! சரி னு சொல்லி அவ கைல VICKS எடுத்து கொடுத்துட்டு நான் மட்டும் சென்று கௌன்டர் ல VICKS கு பில் கட்டினேன்.. சிறிது நேரத்தில்.. எனக்கு சில பொருட்கள் வாங்க கையில் எடுத்ததும் ரித்து சத்தமாக.. " அச்சா பில்.. பில் first " என்று கூறவும்.. ஒரே சிரிப்பு தான் எனக்கு.. அவளோட சாக்லேட், VICKS, எல்லாம் பில் வேண்டாமாம்.. நான் வாங்கினா மட்டும் உடனே பில் கொடுக்கணுமாம்.. நல்லா இருக்குல்ல??
ரித்து வை நான் கையில் தூக்கி கொண்டு, எல்லாம் வாங்கிட்டு பில் போட்டுட்டு இருக்கறப்போ.. அந்த cahsier மிஷன் முன்னாடி ஒரு சிறு குழந்தையின் வாட்ச் இருந்தது.. ரித்து அதை கைகாட்டி " அச்சா பேபி வாட்ச்" என்றால்.. சரி நானும் அவள் கேட்கிறாளே என்று அந்த வாட்ச் எங்க இருக்கு எனக்கும் ஒன்று வேண்டும் என்று கேட்டேன்.. அவரோ சாரி சார் இது இங்க இல்ல.. ஷாப்பிங் வந்தவங்க யாரோ விட்டுடு போய்டாங்க அதான் எடுத்து வச்சிருக்கோம் என்றார்!
உடனே சிறிது வினாடிகளில் கடைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பரவாயில்லை இந்த வாட்ச்சை நீங்களே எடுத்துக்கோங்க என்றார். நானோ பரவாயில்லை வேண்டம் அவள் இதை வாங்க மாட்டாள் இதே போல் வேறு ஒன்று தான் அவளுக்காக வேண்டும் என்றேன். உடனே அவரே பரவாயில்லை எடுத்துகோங்க என்று ரித்து கையில் எடுத்து கொடுத்தார். ஆனால் உடனே ரித்து வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டாள்.. !! எனக்கும் மனைவிக்கும் ஒரே ஆச்சரியம், எப்படி ரிதுவுக்கு புரிந்தது என்று..!! இத்துணைக்கும் எங்கள் இருவருடய உரையாடல் முழுதும் நடந்தது " ஹிந்தி" யில்..
அவள் புரிந்து வேண்டாம் என்றளா? .. இல்லை எனக்கே எனக்கென்று புதிதாய் தான் வேண்டும், அதனால் இது வேண்டாம் என்று வேண்டாம் என்றாளா? எனக்கும் இன்னும் சரியாய் தெரியவில்லை. இரண்டில் ஒன்று எதுவாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என்று தோன்றுகிறது.
எது கொடுத்தாலும் சரி னு வாங்கிட்டு இருந்த என் காலம் எங்கே..!! எனக்கு என்றால் " இது தான் " வேண்டும் என்று தெளிவாக இருக்கும் இக்கால குழந்தைகள் எங்கே..!!
ரித்துவின் பழக்கத்திலுல்ல வார்த்தைகள் சில
அம்மா -
அப்பா -
அச்சா - அப்பாவை தான் இவ்வாறும் ..
அம்மச்சி - பாட்டி
அப்பச்சா - தாத்தா
uncle / மாமா - மாமாக்கு தான்..
அச்சா பொக்கு - அவளை நான் தூக்குவதர்க்கு ..
மானாம் - வேண்டாம்
வெள்ளம் / தண்ணீர் - நீர்
தூது - பால்
மாஸ்க் - மசுதிக்கு..
pussy cat - பூனைக்கு
போலாமா - வெளியே கிளம்ப தயாராகி கொண்டு இருக்கும்பொழுது
அவளுக்கு உடை இட்டதுமே உடனே கேட்கும் கேள்வி
அச்சா come here - எதையாவது என்னிடம் காட்டுவதற்கு.. அல்லது அவளுக்கு வேண்டியதை எடுத்து தர..
அச்சா gooo (high pitch) - அவள் செய்யும் எதையாவது தடுக்கும் பொழுது..
அச்சா less go (lets go) - எங்காவது அவளை அழைத்து செல்ல..
pussy cat - பூனைக்கு
வாவோ சாச்சி - தூங்குவதற்கு..
அச்சா வாவோ சாச்சி - அப்பா தூங்கு என்று என்னை தட்டி கொடுக்கும்
போது,..
light வாவோ சாச்சி - பகலில் தெரு விளக்குகளை பார்த்து, அவை அணைந்து இருப்பதால்..
light எழுனிச்சு - இரவில் வெளியில் செல்லும்போது (இங்கு குளிர்கலமதலால் இப்பொழுது விரைவிலேயே இருட்டி விடுகிறது) எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்குகளை பார்த்து இவ்வாறு..
டுவி டுவி - பறவைகளாம் ...
மூ மூ - மாட்டிற்கு..
பௌ பௌ - நாயாம் ..
சிக்கன் - இது கோழி கறிக்கு :)
அவள் அடித்து நான் விளையாட்டாய் அழும் பொழுது - போட்டே அச்சா.. போட்டே அச்சா என்று ஆறுதல்.. :)
அச்சா தள்ளும் - ரித்து அப்பாவை அடிப்பாள்..
இன்னுமும் வரும்..
Rithu`s Day..

அதற்கு பின் அங்கேயே ரித்துவும் விளையாட ஆரம்பித்தாள்.. கேக் cutting- க்கு அப்புறம் விளயாட வேண்டியே அங்கு அழைத்து வந்து இருந்தோம்.. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடினாள் .. அந்த நேரத்து புகைப்படங்களே இவை..
கண்டிப்பாக ரித்து இதில் மகிழ்ந்திருப்பாள் என்றே எண்ணுகிறோம்..
Gift of Love
நவம்பர் 14 - 2006 இது தான் எங்கள் மகள் மோகிதா வின் பிறந்த தினம் .. பிறந்த இடம் இப்பொழுதும் நாங்கள் - நான், மனைவி நிர்மலா மற்றும் மோகிதா - வசித்து கொண்டிருக்கும் மஸ்கட் - ஓமனில்.
எங்கள் மகள் பிறந்த நான்காம் நாள் எடுத்த வீடியோ இது .. வாழ்க்கையின் எத்துணையோ ஏற்ற தாழ்வுகளிலும் என்றுமே இன்பமாய் ஏற்றமாய் அன்பாய் .. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமாய் எங்களுக்கென்று வந்த Angel மோகிதா (அ) ரித்து..