RSS

ரித்துவின் பிறந்த நாள்


இன்று பிறந்த நாள் கானும் ரித்துவிற்க்கு என்றென்றும் இன்புற்று வாழ அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அப்பச்சா, அம்மச்சி, மாமா, சித்தப்பா, சித்தி, நண்பர்கள் மற்றும் அனைவரின் அன்பு வாழ்த்துக்கள்.ரித்துவின் பிராகரஸ்..

ரித்து கடந்த மார்ச் 2010 லிருந்து 1 சென்று கொண்டிருக்கிறாள்.. தினமும் காலை 7.45 க்கு கிளம்பினாள் மேடம் திரும்பி வருவது 1.00 க்கு தான். தினமும் புதிய கதைகள் ரித்துவிடமிருந்து எங்களுக்கு... வகுப்பு மேம் சொல்லி தருவது மட்டுமல்லாமல் அவளது வகுப்பு நண்பர்கள் சொல்வதுமாய் சேர்ந்து..

எழுத்துக்கள்.. எண்கள்.. படம் வரைதல்.. விளையாட்டு.. என எல்லாமுமாய் நிறையவே கற்றுக்கொண்டு வருகிறாள் ரித்து.. வகுப்பு மட்டுமல்லாது இவையனைத்தையும் சிரத்தயாய் ரித்து கற்பதற்க்கு மிக மிக முக்கிய காரனாகர்த்தர் ரித்துவின் அம்மா மட்டுமே.. அனைத்திற்க்கும் கூடவே இருந்து அவளுக்கு கற்பிப்பதோடு மட்டுமல்லாமல்.. ரித்துவிற்க்கு தான் செய்வதில் மிகுந்த ஈடுபாட்டையும் உண்டாக்கியிருக்கிறார்.
அது ரித்து எழுதுவதாயிருந்தாலும் சரி, இல்லை பள்ளிக்கு செல்வதாயிருந்தாலும் சரி, படம் வரைவதாயிருந்தாலும் சரி.. கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதாயிருந்தாலும் சரி... எல்லாவற்றிர்க்கும் ரித்துவின் தாயரின் பங்கே மிக முக்கியமானதாயிருக்கின்றது..

கடந்த மூன்று மாத ரித்துவின் வகுப்பு பிராகரஸ் ரிப்போர்ட் பள்ளியிலிருந்து கடந்த வாரம் கொடுத்திருந்தார்கள்.. எங்களுடைய ஆவல் எல்லாம் அவள் செய்வதில் விருப்பத்தோடும் ஈடுபாட்டோடும் செய்தாலே மிகுந்த மகிழ்ச்சி என்றிருக்கிறோம்.. ரித்து மேடமும் எதிலும் நான் சிறப்பானவள் என்று மீண்டும் இந்த பிராகரஸ் ரிப்போர்ட் மூலம் கான்பித்திருகிறாள் என்றே சொல்ல வேண்டும்..
ரித்துவிற்க்கு.. என்றும் நீ விரும்பி செய்வதில் சிறப்புடன் விளங்க என்றும் எங்களின் வாழ்த்துக்கள்.இவையனத்திற்க்கும் காரனமே நீ தான் அதானால் நீயே இதில் கையெழுத்து போடு என்று ரித்துவின் அம்மாவிடம் எவ்வளவோ மன்றாடியும்.. கையெழுத்து இடாது.. இது தன்ந்தைக்கு மட்டுமேயான சிறப்பு என்று கூறி என்னை கையெழுத்திட வைத்த என்ற ரித்துவின் அம்மாவிற்க்கு.. என் வணக்கங்கள்..

மே 2010 இந்தியப் பயணம்..

கடந்த மேயில் இந்தியா வந்திருந்தோம். ரித்துவிற்க்கு பள்ளி விடுமுறையாதலாலும் எனது தம்பியின் திருமணத்திற்க்காகவும்..

இதுதான் ரித்து பார்க்கும் முதல் திருமண நிகழ்ச்சியாதலால் எல்லவற்றையும் ஆர்வமாக கவணித்துகொண்டிருந்தாள். முதல் நாள் வரை சித்தப்பாவிடம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருந்தவள் சித்தப்பாவிற்க்கு திருமணம் என்றதும் முழுதுமாக சித்தப்பாவிடமே ஒட்டிக்கொண்டாள். காலை மனவரையிலிருந்து மாலை வரவேற்பு வரை திருமணத்தம்பதிகளுடனேயே இருந்த்தாள்...

திருமணத்திற்க்கு பின் ரித்து இரண்டு மாத விடுமுறையிம் சென்னையில் தான்.. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய்.. பின்ன யார் சொல்றதும் கேட்க வேண்டாம்... தாத்தா பாட்டி மாமானு எல்லோரும் தூக்கி வச்சி கொண்டாடறாங்க.. வேற என்ன வேனும்.. அப்போ ரித்து அவங்க அம்மா எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இங்கே..செஸ்..
எனக்கு விபரம் தெரிந்து நான் செஸ் விளையாடுவது நான்காம் வகுப்பிலிருந்து என்று நினைக்கிறேன்.. முழு முதல் காரணம் அப்பா மட்டுமே. அப்பா தான் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் செஸ்ஸில் முதலிடம் இரண்டாம் இடம் என வெற்றி பெற்றுவருவார்.. அதுமில்லாமல் அவர் வீட்டில் இருக்கும் பொழுது படிக்காம இருக்க அவருடன் செஸ் விளையாட ஆரம்பித்தேன்..

முதலில் வெரும் வெட்டும் ஆட்டத்திற்க்காக ஆசைப்பட்டும் அப்பாவுடன் விளையாடும் அனுபவத்திற்க்காக மட்டுமே ஆடினாலும் செஸ் என்னை மிகவும் அதனடன் என்னை ஆட்படுத்திக்கொண்டது.

முதலில் அப்பாவுடன் ஆட ஆரம்பித்த புதிதில் எல்லாம் அப்பா தான் வெற்றிபெறுவார், அப்புறம் நான் அழிச்சாட்டியம் பன்னி வெற்றி பெறுவேன் (அப்பா விட்டுக்கொடுத்துதான்..) ஆனால் ஒன்பதாம் வகுப்பிற்க்குப்பின் ஓரளவு நன்றாக ஆட கற்றுக்கொண்டுவிட்டேன்.. அப்பாவுடனான ஆட்டங்கள் மிக சுவாரசியமாகவும் கடினமாகவும் செல்லும்.. பின் கல்லூரியிலும், கொச்சின் அலுவலக்த்திலுமாக செஸ்ஸில் முதலாய் கொடி நாட்டிய வருடங்கள் பல.. 2000 வருடத்திலிருந்து செஸ்ஸை சுத்தமாக எந்த வடிவிலும் தொடமுடியவில்லை..

கடந்த முறை சென்னை வந்த பொழுது பிரதர் இன் லா லேப்டாப்பில் செஸ்ஸைக்கண்டு சிறிது நேரம் கம்யூட்டருடன் ஆடிக்கொண்டிருந்த பொழுது தான் ரித்து செஸ்ஸைக் கம்யூட்டரில் கண்டு ஆட ஆரம்பித்திருக்கிறாள்.. இந்த மூன்று மாதமாக கம்யுட்டரிலும் செஸ் போர்டிலுமாய் மேடம் விளையாடிக் கொண்ட்டிருக்கிறாள்..

பார்க்கலாம் எவ்ளோ நாள்ள மேடம் என்னை வெற்றிகொள்ளப் போகிறாள் என்று... மிகுந்த ஆர்வம் காட்டினால் மட்டுமே கண்டிப்பாக தேவையான எல்ல முயற்ச்சியும் பயிற்ச்சியும் ரித்துவிற்க்கு உண்டு.. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு அப்பாவின் பயிற்ச்சி நன்கு விளையாடி கல்லூரி அலுவலகத்தில் முதலாய் வருமளவிற்க்கு.... :)

மேலே இருக்கும் புகைப்படங்கள் இந்த மாதம் சென்னையில் ரித்து விளையாடிக்கொண்டிருந்த பொழுது எடுத்தது..

கடந்தமாத புகைப்படங்கள்..

இது ரித்துவின் புதிய ரூமில் அவளுக்கான விளையாட்டு இடம்.. மேடம் ஸ்பைடர் மேனாகவும் கிச்சனிலும் சமைத்துக்கொண்டிருக்கிறாள்.. சமையல் விளையாட்டு உபகரணம் எதோ ஒரு நண்பர் ரித்துவிற்க்கு பிறாந்த நாள் பரிசாக தந்தது..


இப்படி குடுமி போடுறது தான் ரித்துவிற்க்கு ரெம்ப இஸ்டம்.. இப்போ எல்லாம் விளம்பரம் பார்த்து தனக்கும் நீளமான முடி வேனும்னு அடம் வேற.. அவங்க அம்மாவையும் நீள முடி எங்கேனு கேள்வி வேற.. இது நாள் வரை முடி வெட்டி இருந்த அவங்க அம்மா இப்போ ரித்துக்காக.. முடி நீளமாக வளர்க்கிறாங்க..ரித்துவின் தந்தைக்கும் தந்தையின் தந்தைக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..

ஹேப்பி பாதர்ஸ் டே.. இது தன் ரித்துவின் வாழ்த்து இந்த அப்பாவிற்க்கு.. இதோடு மட்டுமல்லாமல் ஒரு குறுந்தகவலும் உண்டு.. ஆங்கிலத்தில்..

HAPPY FATHERS DAY acha.
Thank you for loving me,
Cuddling me,
Guiding me and for
Being mine.
You are the worlds best dady..
My sweet darling acha oru paadu istam..
Love you Acha..

ரித்துவிற்க்கு அப்பவின் நன்றியும் வாழ்த்துக்களும்..

இனி அப்பாவின் அப்பாவிற்க்கானது..

அப்பாவிற்க்கு வணக்கமும் தந்தையர் தின வாழ்த்துக்களும். முதன் முதலாக உங்களுக்கே மட்டுமான இந்த ஒரு நாளுக்கான எங்களனைவரது வாழ்த்துக்கள்.

எத்தனையே விழாக்களும் பண்டிகைகளுமாக வந்தாலும் எங்களுக்கும் அம்மாவிற்க்கும் என்று என்னி நீங்கள் செய்தவைகளே அதிகம். இன்றுவரை உங்களுக்கு என்று ஒரு ஒரு பண்டிகைக்கும் எடுக்கும் புது துனிகள் கூட நீங்கள் தைத்து அனிவதே சில மாதங்கள் கழித்து தான்..

இது நாள்வரை குடும்ப்பம் குழந்தைகள் எல்லாரும் நல்லா வரனும் என்று என்னி ஓடி ஆடி அதிகமாக செய்த வேலைகள் எல்லாம் போதும் இனியாவது உங்கள் உடல் நிலை அறிந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்..

மீண்டும் உங்களுக்கு எங்களனைவரது தந்தையர் தின வாழ்த்துக்கள்.

அன்னையர் தினம்..

மஸ்கட்டில் அன்னையர் தினம் கொண்டாடப்படுவது மார்ச் 10 ம் தேதியில் ஆனால் நேற்று ரித்துவின் வகுப்பில் அன்னையர் தினம் குறித்து ரித்துவுக்கு அவங்க மேம் சொல்லிக்கொடுத்து அதற்கான ரித்துவின் கை பிரிண்ட்டும் ஏற்க்கனவே பிரிண்டான குறிப்பும் அனுப்பியிருந்தார்.. அது இங்கே..இது பார்த்ததிலிருந்து .. ரித்துவுடன் பயங்கரமா சண்டை போட்டுகிட்டிருந்த அவங்க அம்மா இப்ப ரெம்ப பாசக்காரம்மாவா பீலீங்ஸ் ல இருக்காங்க...:)

ரித்துவும் அவளின் பச்சை பொம்மையும்..வீட்டிற்கு வந்த பட்டாம்பூச்சி தேவதை..

ரித்துவிற்க்காக அவளின் அம்மா அன்மையில் ஒரு பட்டாம்பூச்சி சிறகுகள் வாங்கி வந்திருந்தார்.. அன்று இரவு முழுதும் ரித்து பட்டாம்பூச்சியாய் விளையாடிது இங்கே..


ரித்துவின் புகைப்படங்கள்..

கடந்த இந்திய விடுமுறையின் போது எடுத்த புகைப்படங்கள்...


ரித்துவின் புகைப்படங்கள்.. துபாய் பிப் 2010

இந்த புகைப்படங்கள் அனைத்தும் கடந்தமுறை துபாய் சென்ற பொழுது எடுத்தவை..முதல் நாள் இன்று...

ரித்துவின் முதல் பள்ளி நாள் இன்று. காலையில் தான் இங்கிருக்கும் இந்தியன் பள்ளியில் மேடத்தை சேர்க்க சென்றிருந்தோம்..

இரண்டு நாளாகவே ரித்து தயாரக தான் இருந்தாங்க பள்ளிக்கு செல்ல.. இன்று வரச் சொல்லியிருந்ததால் இன்றே எல்லாம் தயார் செய்து எடுத்து சென்று ரித்துக்கான பள்ளியில் சேர்த்தாகிற்று..

ரித்துவும் 3 1/2 மணி நேரம் பள்ளியில் இருந்துவிட்டு “ அழாமல்” நல்ல குழந்தையாய் வந்ததோடல்லாமல் நாளைக்கும் போகனும்னு சொல்லி இருக்காங்க..


இந்த பள்ளியில் சேர்ப்பதற்க்குள்ளாகா நடந்தவை எல்லாம் இனியொரு பதிவில்..


பள்ளி..

இது ஒரு மூன்று மாதத்திற்க்கு முன் நடந்தது..

கடந்த மூன்று மாதமாக ரித்துவிற்க்கான பள்ளி எது என்று ஒரே தேடும் படலம் தான் என்னுடைய முக்கியமான வேலையாகிப்போனது! நவம்பர் 14 க்கு பின் துனைவியாரின் முழு நேர நினைவூட்டலால் இன்னும் தேடல் அதிகமாகியது... ஏற்க்கனவே நான் துனைவியிடம் சொல்லியிருந்தது இது தான்.. ரித்துக்கு பள்ளி என்பது அவள் மூன்று வயது கடந்ததும் மட்டுமே என்று.

அதனால் ரித்துவிற்க்கு மூன்று வயது ஆகும் வரை அவ்வப்போது அவர் நினைவுட்டி வந்தார் என்றாலும் கடந்த 1 1/2 மாதங்களாக மிகவும் அதிக முனைப்பெடுத்து ஒரு ஒரு பள்ளியாக (நர்சரி தான்)இருவரும் தேட ஆரம்பித்தோம்..

நினைத்ததும் உடனே கிடைத்துவிடுமா என்ன? வீட்டிற்க்கு அருகில் இல்லை, அல்லது இடவசதி சரியில்லை.. அல்லது குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள் இல்லை.... இப்படியாக ஒரு மாதம் ஓடி விட்டது.. சரி இருக்கறதுலயே பரவாயில்லததாக ஒன்றை தேர்ந்தெடுத்து (அதாங்க நம்ம ஊர்ல ஓட்டு போடறது மாதிரி) இரண்டு வாரத்திற்க்கு முன் ஒரு நல்ல நாள் பார்த்து அந்நாளில் ரித்துவினை சேர்த்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.
நர்சரி காலை 8 மணியிலிருந்து பகல் 12 வரை மட்டுமே..


அவர்களிடம் போனிலேயே என்ன என்ன வேண்டும் என்று கேட்டு முதல் நாள் இரவே எல்லம் எடுத்து வைத்து அவளிடமும் சொல்லியிருந்தோம்.. நானும் அலுவலகத்திற்க்கு விடுமுறை எடுத்திருந்தேன்.

இறுதியில் அந்த நல்ல நாளும் வந்ததும்.. நானும் ரித்துவின் அம்மாவும் 6 மணிக்கே எழுந்து ரெடியாகி காத்திட்டு இருக்கோம்.. ரித்து தான் எழுந்தபாடில்லை..


மணி 7 ஆச்சு..

8 ஆச்சு..

9 ஆச்சு..

ஊகூம்.. ரித்து தான் எழுந்திருக்கவே இல்லை.. சரி இதுக்கு மேல வேண்டாம்னு ரித்துவை நாங்களாகவே எழுப்பினாலும் மேடம் எழுந்திருக்கவே இல்லை..

இவ்வளவுக்கும் 2 நாளா அவதான் பள்ளிக்கு போகனும் ரித்து பள்ளிக்கு போகனும்னு அடம் பன்னிட்டிருந்தால்.. சரி அது சொல்லியாது எழுப்பலாம்னாலும்.. கடைசிவரை எழுந்திருக்கவே இல்லை..

சரி எதோ ரெம்ப மேடம் டயார்டா இருக்கனு நாங்களும் விட்டாச்சு.. கடைசியா ரித்து எழுந்தது 1 மணிக்கு.. எழுந்து கொஞ்ச நேரத்திலயே அப்பா வா பள்ளிக்கு போலாம்னு வேர அடம்.. ஹ்ம்ம்ம்ம்..

பள்ளி மூடின பின் பள்ளிக்கு போலாம்னா எப்புடி? மீதி இருந்த விடுமுறையை ரித்துவுடன் பார்க்கில் சென்று கேம்ஸ் விளையாடுவதில் சென்றுவிட்டது..

ரித்துவின் இரண்டும் .. மூன்றும்..

Click here to view this photo book larger

மலர்க்கொத்து...


கடந்த வாரம் வீட்டுக்காரம்மாவுக்காக ஒரு ரோஜா மலர்க்கொத்து வாங்கிச் சென்றிருந்தேன்.. கதவு திறந்ததுமே முன் நின்றவள் ரித்து தான்.. வாவ்.. ரோஸ் என்று.. ஒரே ஓட்டத்தில் என் கையில் இருந்ததை இழுத்து பிடித்து வாங்கி விட்டாள்..


வாங்கினது மட்டும் என்றால் பரவாயில்லை.. அதில் இருந்த அழகு வேலைப்படுகளை எங்கே கலைத்துவிடுவாளோ என்று ஒரே படபடப்பாகிவிட்டது.. பின்னே மனைவிக்கு வாங்கினதாயிற்றே.. மனைவியும் வந்துவிடவும் ரித்து அப்பாட்ட தாட இது மம்மிக்கு தரனும் என்று நான் சொல்லவும் .. நோ இது ரித்துவுக்குனு தராமல் ஒரே ஓட்டம்.. அதோட இல்லாமல் மலர்க்கொத்தை கையில் வைத்துக்கொண்டே பலவித முக பாவனைகள் வேறு..வேறு வழியில்லாமல் சரி ரித்து நீயே மம்மிக்கு கொடுடானு சொன்னதற்க்கும்.. இல்லை இது ரித்துக்குனு கடைசி வரை மேடம் தரவேயில்லை.. .

புகைப்படம் எடுக்கும் சாக்கில் கடைசியில் அம்மாவையும் ரித்துவையும் சேர்த்து உட்காரவைத்து தான் மலர்க்கொத்தை மனைவியிடம் தரமுடிந்தது..