ஒரு மாதத்திற்க்கு முன்பிருந்தே மஸ்கட் வாழ் தமிழர்கள் மற்றும் தென் இந்திய மக்களிடையே இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இருக்காதா பின்னே? வருபவர்கள் என்ன சாதரனமானவர்களா? கின்னஸ் சாதனை, தேசிய விருதுகள், மாநில விருதுகள், ஃபிலிம் பேர் விருதுகள் என வாங்காத விருதுகளே இல்லையே.. எத்துனையோ வருடங்களாக தமிழ் சினிமாவில் சிறந்த பின்னனி இசை பாடகர்களாய் திழ்கிறார்கள், கண்டிப்பாக நிகழ்ச்சி களை கட்டும் என்று இங்குள்ள அனைவரும் எதிர்பார்த்திறுந்தோம்.. இன்னும் சொல்ல போனால் எனக்கும் எனது துனைவியாருக்கும் ... என்றால் மிகவும் பிடிக்கும்.. அவருடைய பாடல்கள் இல்லாமல் எந்த கார் பயனமும் இருக்காது.. இதே போல் எத்துனையோ பேர் ஆவலுடன் எதிர்பார்த்திறுந்தோம்.
மேலும் நிகழ்ச்சி மஸ்கட் தமிழ் சங்க உறுப்பினர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் மட்டுமே என்ற அறிவுப்பு வேறு அனைவரது எதிர்பார்ப்பையும் ஆவலையும் பண்மடங்கு உயர்த்தியிருந்தது..(சாதரனமாக இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல விலைகளில் “டிக்கெட்” விற்பனை இருக்கும்..)
எதிர்பார்த்த ஏப்ரல் 3 ம் வந்தது.. நிகழ்ச்சியும் சரியான குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியது (மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் சிறப்பு இது.. எந்த நிகழ்ச்சியானாலும் குறித்த நேரத்தில் துவக்குவது..)
திரு.SPBயும் சித்ராவும் வந்திருந்தனர். அரங்கு நிறைந்த 6500க்கும் குறையாத ரசிகர்கள் கூட்டம்.. முதலில் இருவருக்கும் ஒமான் நட்டிற்க்கான இந்தியத்தூதர் ” வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்" இருவருக்கும் வழங்கி கௌவ்ரவித்தார்.
SPB நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கியதையும் மிக கட்டுக்கோப்பான ரசிகர் கூட்டத்தையும் சிலாகித்துவிட்டு.. ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்துடன் முதல் பாடலாய் ”ஒரு பொன் மாலைப் பொழுது” உடன் நிகழ்ச்சியை துவங்கினார் ”
அடுத்ததாய்.. “சங்கரா பரனமு..” வுடனும் அடுத்ததாய் சித்ரா அவர்களின் பாடல்களுடனும் நிகழ்ச்சி தொடர்ந்தது.. 1/2 மணி நேரம்.. 1 மணி நேரம்.. நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் தொடவே இல்லை.. திரு.SPB பாடிய அனைத்து பாடல்களும் சாதரன மக்களிடம் மிகவும் பிரசித்தி பெறாத, சில சங்கீத சிறப்புடைய பாடல்கள் மட்டுமே. அவருடைய பிரசித்தி பெற்ற ரஜினி பாட்டுகள் இல்லை, அவரின் விருதுகள் வாங்கிய பாடல்கள் இல்லை, ரசிகர்களை எழுந்து ஆடவைக்கும் பாடல்கள் இல்லை.. என்னாயிற்று SPB? “காதல் ரோஜாவே” எங்கே? “தங்கத்தாமரை நிலவே “ எங்கே? ” ஒருவன் ஒருவன்” எங்கே? இன்னும் நிறைய பாடல்கள் “ எங்கே எங்கே ” என்று கேட்கவேண்டியதாகிவிட்டது..
ஆனால் சித்ராவோ மக்கள் ரசித்த, விருது வாங்கிய அவருடைய அனைத்து பாடல்களையும் பாட தவறவில்லை..
திரு.SPB யின் பாடல் தேர்வால் - அவருக்கு பிடித்த பாடல்கள், ரசிகர்களை அதிகம் கவராத - ரசிகர்களிடம் அத்துனை வரவேற்பு இல்லை. நாம தான் ரெம்ப நல்லவங்களாச்சே, நிகழ்ச்சி துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே (8 மணிக்கே) கூட்டம் கூட்டமா ரசிகர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்து விட்டனர்.. சாதரனமா இது போன்ற நிகழ்ச்சிக்கு 10 30 வரை எப்பவும் ரசிகர்கள் அமர்ந்த்திருப்பர் (கடந்த ஆண்டு மனோ, சுஜாதா, மனோரமா - வின் இது போன்ற நிகழ்ச்சி 11 மணி வரை அரங்கு நிரைந்து நடந்தது..)
இதில் வருத்தபட வேண்டியது என்னவென்றால், ” ராஜா மாதிரி உட்கார்ந்து கேளுங்கள் நான் உங்கள் அடிமை போல பாடுகிறேன்“ என்று ரசிகர்களிடம் கூறிய திரு.SPB ரசிகர்கள் ”ரஜினி பாட்டு, SUPERSTAR பாட்டு” என்று கூறியபோதெல்லாம்.. எதோ அவருக்கு கேட்காதது போல நடந்து கொண்டதுதான்.. ரசிகர்கள் எதாவது வெகு நேரம் கழித்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. “ நாங்கள் மற்றும் இசைக்கருவிகளுடன் பயிற்ச்சி செய்துவந்த பாடல்கள் மட்டுமே பாட முடியும்.. ” என்று எதோ அனைவருக்கும் ஒரு சப்பைக்கட்டு கட்டினார்.. !! இதிலும் காமெடி!! இன்னிசை குழுவோ “ சாதக பறவைகள்” அவர்களோ திரு.SPB பாடிய ரஜினி பாட்டுக்களையும், அவரின் ஹிட் பாடல்களையும் பாட தாயாராய் இருக்கும் பொழுது, திரு.SPB மட்டும் அவருக்கு பிடித்த பாடல்களை மட்டும் தொடர்ந்து பாடியது ஏனோ?.. திரு.SPB அவர்களே ரஜினியுடன் எதும் கோவமா தங்களுக்கு, அப்படியே இருந்தாலும் காண்பிக்க கூடிய இடம் இதுவல்லவே?!
திரு.SPB அவர்களே தங்களுக்கு வேண்டுமானால் இந்நிகழ்ச்சி பத்தோட பதினொன்றாய் இருக்கலாம்.. ஆனால் என்போன்ற உங்கள் மஸ்கட் வாழ் ரசிகர்களுக்கு உங்கள் பாடல்களை நேரில் கேட்க அரிதாய் வாய்த்த ஒரு நிகழ்ச்சி.. இப்படி ஏமாற்றலாமா?? எத்துனை மேடைகளை கண்டவர் நீங்கள்? எத்துனை பாடல்கள் பாடியவர் நீங்கள்? உங்களுக்கு தெரியாததா?? ரசிகர்களுக்கு என்ன வேண்டும் என்று?? இப்படி ஏமாற்றலாமா எங்களை நீங்கள்????
பி.கு.
நிகழ்ச்சியின் முடிவில் நண்பர் ஒருவரின் காமெண்ட்.. “ இங்க கேட்ட இந்த பாடல்கள் இருக்கும் கேஸட், இப்போ சன், ராஜ், ஜெயா டிவில கூட போடறது இல்லியேப்பா!! ”
0 comments:
Post a Comment