நீண்ட நாட்களாகவே மனதில் உறுத்திகொண்டிருக்கும் ஒரு விஷயம்!! இலங்கை கொலைகள்.. " தமிழர்கள் " என்று அரசியல் செய்ய விரும்பவில்லை ஒரு சாதரண மனிதனாக.. ஒரு சாதரண மனிதனுக்கு நடக்கும் இந்த அடக்குமுறை, வன்முறை மேல் கொண்ட இந்த வெறுப்பு..! அவர்கள் செய்த தவறு தான் என்ன? ஒன்றுமே தெரியாமல் துப்பாக்கியின் தோட்டாவிற்கும் "கிளஸ்டேர்" குண்டுகளுக்கும் அநியாயாமாய் உயிரையும் உறுப்புகளையும் இழந்தோர் / இழப்போர் எத்துனை எத்துனை..
முடிவில் இந்த இலங்கை அரசாங்கம் மற்றும் ஈழப் போராளிகள் என்ன தான் செய்ய போகிறார்கள் உயிர் இழந்த மனிதர்களுக்கும் அதைவிட "உறுப்புகள்" இழந்த மனிதர்களுக்கும் .. இன்னும் எத்துனை நாட்களுக்கு இந்த முடிவே இல்லாத சண்டைகள்? யாருக்காக?
இதே வேறு நாட்டில் நடந்திருந்தால் உலகமே மொத்தமுமாய் உதவிக்கரம் கொடுத்து போரையே சமாதனத்திற்கு கொண்டு சென்றிருக்கும்.. இங்கு மட்டும் ஏன் இந்த பார முகம்? உயிர் இழந்தவர்கள் போதவில்லையா? இன்னும் எவ்வளவு உயிர் பலி வேண்டும்!!
மின்னஞ்சல் களிலும் இணையங்களிலும் கண்ட புகைபடங்கள் என்னை மிகவும் பாதித்தால் இதை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று தோன்றியதால் இந்த ஒரு குமுறல் மட்டும்!! இங்கு இப்பொழுது..
0 comments:
Post a Comment