நீண்ட நாட்களாக எழுத நினைத்தது இன்று தான் எழுத முடிந்தது.. என் பிறந்த நாள் என்றாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவது, எனக்கு கிடைக்கும் புதிய உடைகள் தான்.. எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து படித்து முடித்து வேலையில் சேரும் வரை வந்த எல்லா பிறந்த நாட்களுக்கும் புதிய உடைகள் கிடைத்திருக்கின்றன..
அதே போல் பிறந்த நாள் என்றாலே வீட்டிலும் சரி நண்பர்கள் வட்டத்திலும் சரி, பள்ளியிலும் சரி அன்று முழுவதுமே ராஜ உபசரிப்பு தான்.. எதற்க்கும் திட்டு கிடையாது, எது இரவல் கேட்டாலும் தருவார்கள், கோபமாக கூட பேச மாட்டார்கள்.. எல்லாவற்றிற்க்கும் காரனம்“ பிறந்த நாளன்று செய்வதை அந்த வருடம் முழுவதும் செய்வார்கள்” என்ற நம்பிக்கை தான்.. கண்டிப்பாக எல்ல நண்பர்களுக்கும் அன்று இனிப்போ, சாக்லேட்டோ கொடுக்க தவறியதில்லை..
இதில் சிறப்பு என்னவென்றால் எங்கள் ஊரிலும் சரி உறவினர் வட்டத்திலும் சரி யாரும் பிறந்த நாள் கொண்டாடுவதென்பது என்று எதுவும் கிடையாது. ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் அப்பா வேறு எதற்க்கு புது உடைகள் எடுக்கிறாரோ இல்லையோ ஆனால் நான், தம்பி மற்றும் தங்கை என எங்கள் மூவர் பிறந்த நட்களுக்கும், அவர் அவர் பிறந்த நாட்களில் புது உடைகள் கட்டாயம் எடுத்து தந்து விடுவார்..
ஆனால் இது வரை அப்பாவிற்க்கென்று எந்த பிறந்த நாளையும் நாங்கள் கொண்டாடியதாய் நினைவு இல்லை. அவரும் இது பற்றி சொன்னதும் இல்லை கேட்டதும் இல்லை... எல்லாம் இப்ப “அப்பாவனதும்” தான் தெரிய வருது!!! இவ்வளவு நாட்களாக இது பற்றி ரெம்பவே யோசிக்காமலிருந்த எனக்கு இதை உனர்த்தியதும் இந்த “தகப்பன்மை” தானோ ?
நன்றி அப்பா அனைத்திற்க்கும்..
3 comments:
அண்ணாச்சி...என்ன இது எம்புட்டு பெரிய விஷயத்தை சட்ன்னு முடிச்சிட்டிங்க.
சுருக்கமாக சொன்னாலும் நெகிழ்ச்சியுடன் இருக்கு பதிவு.
இதை படிக்கும் ஒரு கொசுவத்தி ஞாபகத்துக்கு வருது..
நானும் என்னோட அக்காவும் அப்பாவின் ஒரு பிறந்தநாள் அன்று ஒரு கீரிட்டிங் கார்டு கொடுத்தோம். அதில் "விழுதுகள்" அப்படின்னு எழுதி எங்க ரெண்டு பெயரையும் போட்டு கொடுத்தோம்.
வாங்கினார்
பார்த்தார்
சிரித்தார்...
"நல்லாயிருக்கு சந்தோஷம்" இந்த ரெண்டே வார்த்தை தான். இன்னும் மறக்கவே முடியாத நாள் அது ;)
மிகவும் சரி கோபி.. சில விஷயங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளாய் என்றும் நம்முள் இருக்கும்.. அதில் கண்டிப்பாக ஒன்று நம் “ பெற்றோர்களை” நாமே சந்தோஷமடைய செய்த நிகழ்வுகளும் ஒன்றாய் இருக்கும்.. ஆனால் பெற்றோர்களுக்கோ.. சிறு வயதிலிருந்து நாம் செய்யும் எல்ல செயல்களுமே
சந்தோஷமடைய செய்வதே.. (பெரும்பாலும்..) பிறந்த அழுகையிலிருந்து, தவழ்வது, நடப்பது, பள்ளி செல்வது, மிதிவண்டி ஓட்டுவது, கல்லூரி செல்வது., என எல்லா நிகழ்வுகளுமே அவர்களுக்கு நம்மேல் உள்ளா பாசத்தை மட்டுமல்ல மகிழ்ச்சியையும் சேர்த்து தான் அதிகரிக்கின்றது..
நிறையவே எழுதியிருக்கலாம் தான் அப்பாவை பற்றி.. என்னுடைய மற்றும் ரித்துவின் பிறந்த நாட்கள் குறித்து எழுதியதால்.. இது மட்டும் இப்பொழுது :)
ரசித்தேன்
Post a Comment