RSS
Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

செஸ்..




எனக்கு விபரம் தெரிந்து நான் செஸ் விளையாடுவது நான்காம் வகுப்பிலிருந்து என்று நினைக்கிறேன்.. முழு முதல் காரணம் அப்பா மட்டுமே. அப்பா தான் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் செஸ்ஸில் முதலிடம் இரண்டாம் இடம் என வெற்றி பெற்றுவருவார்.. அதுமில்லாமல் அவர் வீட்டில் இருக்கும் பொழுது படிக்காம இருக்க அவருடன் செஸ் விளையாட ஆரம்பித்தேன்..

முதலில் வெரும் வெட்டும் ஆட்டத்திற்க்காக ஆசைப்பட்டும் அப்பாவுடன் விளையாடும் அனுபவத்திற்க்காக மட்டுமே ஆடினாலும் செஸ் என்னை மிகவும் அதனடன் என்னை ஆட்படுத்திக்கொண்டது.

முதலில் அப்பாவுடன் ஆட ஆரம்பித்த புதிதில் எல்லாம் அப்பா தான் வெற்றிபெறுவார், அப்புறம் நான் அழிச்சாட்டியம் பன்னி வெற்றி பெறுவேன் (அப்பா விட்டுக்கொடுத்துதான்..) ஆனால் ஒன்பதாம் வகுப்பிற்க்குப்பின் ஓரளவு நன்றாக ஆட கற்றுக்கொண்டுவிட்டேன்.. அப்பாவுடனான ஆட்டங்கள் மிக சுவாரசியமாகவும் கடினமாகவும் செல்லும்.. பின் கல்லூரியிலும், கொச்சின் அலுவலக்த்திலுமாக செஸ்ஸில் முதலாய் கொடி நாட்டிய வருடங்கள் பல.. 2000 வருடத்திலிருந்து செஸ்ஸை சுத்தமாக எந்த வடிவிலும் தொடமுடியவில்லை..

கடந்த முறை சென்னை வந்த பொழுது பிரதர் இன் லா லேப்டாப்பில் செஸ்ஸைக்கண்டு சிறிது நேரம் கம்யூட்டருடன் ஆடிக்கொண்டிருந்த பொழுது தான் ரித்து செஸ்ஸைக் கம்யூட்டரில் கண்டு ஆட ஆரம்பித்திருக்கிறாள்.. இந்த மூன்று மாதமாக கம்யுட்டரிலும் செஸ் போர்டிலுமாய் மேடம் விளையாடிக் கொண்ட்டிருக்கிறாள்..

பார்க்கலாம் எவ்ளோ நாள்ள மேடம் என்னை வெற்றிகொள்ளப் போகிறாள் என்று... மிகுந்த ஆர்வம் காட்டினால் மட்டுமே கண்டிப்பாக தேவையான எல்ல முயற்ச்சியும் பயிற்ச்சியும் ரித்துவிற்க்கு உண்டு.. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு அப்பாவின் பயிற்ச்சி நன்கு விளையாடி கல்லூரி அலுவலகத்தில் முதலாய் வருமளவிற்க்கு.... :)

மேலே இருக்கும் புகைப்படங்கள் இந்த மாதம் சென்னையில் ரித்து விளையாடிக்கொண்டிருந்த பொழுது எடுத்தது..

அப்பாவிற்க்கு.. அப்பாவிடமிருந்து..

நீண்ட நாட்களாக எழுத நினைத்தது இன்று தான் எழுத முடிந்தது.. என் பிறந்த நாள் என்றாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவது, எனக்கு கிடைக்கும் புதிய உடைகள் தான்.. எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து படித்து முடித்து வேலையில் சேரும் வரை வந்த எல்லா பிறந்த நாட்களுக்கும் புதிய உடைகள் கிடைத்திருக்கின்றன..

அதே போல் பிறந்த நாள் என்றாலே வீட்டிலும் சரி நண்பர்கள் வட்டத்திலும் சரி, பள்ளியிலும் சரி அன்று முழுவதுமே ராஜ உபசரிப்பு தான்.. எதற்க்கும் திட்டு கிடையாது, எது இரவல் கேட்டாலும் தருவார்கள், கோபமாக கூட பேச மாட்டார்கள்.. எல்லாவற்றிற்க்கும் காரனம்“ பிறந்த நாளன்று செய்வதை அந்த வருடம் முழுவதும் செய்வார்கள்” என்ற நம்பிக்கை தான்.. கண்டிப்பாக எல்ல நண்பர்களுக்கும் அன்று இனிப்போ, சாக்லேட்டோ கொடுக்க தவறியதில்லை..

இதில் சிறப்பு என்னவென்றால் எங்கள் ஊரிலும் சரி உறவினர் வட்டத்திலும் சரி யாரும் பிறந்த நாள் கொண்டாடுவதென்பது என்று எதுவும் கிடையாது. ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் அப்பா வேறு எதற்க்கு புது உடைகள் எடுக்கிறாரோ இல்லையோ ஆனால் நான், தம்பி மற்றும் தங்கை என எங்கள் மூவர் பிறந்த நட்களுக்கும், அவர் அவர் பிறந்த நாட்களில் புது உடைகள் கட்டாயம் எடுத்து தந்து விடுவார்..

ஆனால் இது வரை அப்பாவிற்க்கென்று எந்த பிறந்த நாளையும் நாங்கள் கொண்டாடியதாய் நினைவு இல்லை. அவரும் இது பற்றி சொன்னதும் இல்லை கேட்டதும் இல்லை... எல்லாம் இப்ப “அப்பாவனதும்” தான் தெரிய வருது!!! இவ்வளவு நாட்களாக இது பற்றி ரெம்பவே யோசிக்காமலிருந்த எனக்கு இதை உனர்த்தியதும் இந்த “தகப்பன்மை” தானோ ?

நன்றி அப்பா அனைத்திற்க்கும்..

காலம் மாறுதா.. வயாசாகுதா.!!?

கடந்த வியாழனன்று கடைக்கு சென்று இருந்தோம்.... ரித்து எல்லாம் பார்த்து கொண்டே வந்தவள்.. VICKS மாத்திரை பார்த்த உடனே எனக்கு VICKS வேணும்னு ஒரே அடம்.. சரிம்மா இரு அப்பா பில் போட்டு வாங்கி தரேன்னு சொன்னா.. " நோ பில்.. ரித்து நோ பில்" னு ரித்து ஒரே அடம்.. அதாவது ரிதுக்கு வாங்கினால் பில் கொடுக்க வேண்டாம்னு மேடம் சொல்றாங்க!!! சரி னு சொல்லி அவ கைல VICKS எடுத்து கொடுத்துட்டு நான் மட்டும் சென்று கௌன்டர் ல VICKS கு பில் கட்டினேன்.. சிறிது நேரத்தில்.. எனக்கு சில பொருட்கள் வாங்க கையில் எடுத்ததும் ரித்து சத்தமாக.. " அச்சா பில்.. பில் first " என்று கூறவும்.. ஒரே சிரிப்பு தான் எனக்கு.. அவளோட சாக்லேட், VICKS, எல்லாம் பில் வேண்டாமாம்.. நான் வாங்கினா மட்டும் உடனே பில் கொடுக்கணுமாம்.. நல்லா இருக்குல்ல??

ரித்து வை நான் கையில் தூக்கி கொண்டு, எல்லாம் வாங்கிட்டு பில் போட்டுட்டு இருக்கறப்போ.. அந்த cahsier மிஷன் முன்னாடி ஒரு சிறு குழந்தையின் வாட்ச் இருந்தது.. ரித்து அதை கைகாட்டி " அச்சா பேபி வாட்ச்" என்றால்.. சரி நானும் அவள் கேட்கிறாளே என்று அந்த வாட்ச் எங்க இருக்கு எனக்கும் ஒன்று வேண்டும் என்று கேட்டேன்.. அவரோ சாரி சார் இது இங்க இல்ல.. ஷாப்பிங் வந்தவங்க யாரோ விட்டுடு போய்டாங்க அதான் எடுத்து வச்சிருக்கோம் என்றார்!

உடனே சிறிது வினாடிகளில் கடைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பரவாயில்லை இந்த வாட்ச்சை நீங்களே எடுத்துக்கோங்க என்றார். நானோ பரவாயில்லை வேண்டம் அவள் இதை வாங்க மாட்டாள் இதே போல் வேறு ஒன்று தான் அவளுக்காக வேண்டும் என்றேன். உடனே அவரே பரவாயில்லை எடுத்துகோங்க என்று ரித்து கையில் எடுத்து கொடுத்தார். ஆனால் உடனே ரித்து வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டாள்.. !! எனக்கும் மனைவிக்கும் ஒரே ஆச்சரியம், எப்படி ரிதுவுக்கு புரிந்தது என்று..!! இத்துணைக்கும் எங்கள் இருவருடய உரையாடல் முழுதும் நடந்தது " ஹிந்தி" யில்..

அவள் புரிந்து வேண்டாம் என்றளா? .. இல்லை எனக்கே எனக்கென்று புதிதாய் தான் வேண்டும், அதனால் இது வேண்டாம் என்று வேண்டாம் என்றாளா? எனக்கும் இன்னும் சரியாய் தெரியவில்லை. இரண்டில் ஒன்று எதுவாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என்று தோன்றுகிறது.


எது கொடுத்தாலும் சரி னு வாங்கிட்டு இருந்த என் காலம் எங்கே..!! எனக்கு என்றால் " இது தான் " வேண்டும் என்று தெளிவாக இருக்கும் இக்கால குழந்தைகள் எங்கே..!!

அப்பா பொண்ணு!

பெண் குழந்தை என்றாலே எல்லாரும் அப்பா பொண்ணுனு தானே சொல்வாங்க ஆனா இவங்க (ரித்து) இதில் மாறுபட்டவங்க. ரித்து எப்பொழுதுமே அம்மா பொண்ணு தான்..

முதல் நாளில் இருந்தே அப்பா எப்பவுமே ஏதாவது தேவைக்கு மட்டுமே.. :)உயரத்தில் இருக்கும் விளையாட்டு பொருள் எடுக்க.. மேலே தூக்கி போட்டு பிடித்து விளையாட.. டிவி யில் மிக்கியும் டோராவையும் அம்மாவை மீறி பார்ப்பதற்கு, என்று அவள் தேவைக்கு மட்டுமே அப்பா செல்லமாக இருப்பாள்.. :)

கடந்த வாரம் அவங்க அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லாததால் சில நாள் நானும் கூடவே வீட்டில் இருக்கவேண்டியதாகியது. அந்த அணைத்து நாட்களும் ரித்துக்கு எல்லாமே அப்பா தான்.. அம்மாவே பால் எடுக்க சென்றால் கூட.. நோ மம்மி அச்சா வே பால் தரட்டும் என்றாள்.. நானும் ரெம்ப மகிழ்வோடு எல்லா நாட்களும் ரிதுவின் விளையாட்டு மற்றும் வேலைகளை உடன் இருந்தே பார்த்துக்கொண்டேன். .. இனிமேல் ரித்து முழுதுமாய் அப்பா செல்லம் தான் என்று எண்ணியிருந்தேன்..

என் இந்த எண்ணம் இரண்டு நாட்கள் வரை மட்டுமே நீடித்தது.. 3 ம் நாளில் இருந்து மீண்டும் ரித்து அம்மா பொண்ணு தான்.. !! நானகவே பால் எடுக்க சென்றால் கூட.. நோ அச்சா .. பால் அம்மாவே எடுக்கட்டும் என்று.. :)

என்ன தான் இருந்தாலும், செய்தாலும் தந்தை.. தாயாக முடியாது இல்லியா?

உண்மையாகவே அவளை முழுதும் நானே பார்த்துக்கொண்ட அந்த சில நாட்கள் சிரமமானவையே.. அது ஒரு நல்ல பாடமாகவும், வீட்டையும் குழந்தையையும் கவனிப்பதில் மனைவியின் சிரமங்களை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே அமைந்தது!!


வேலைக்கும் சென்று வீட்டை மற்றும் குழந்தைகளையும் கவனித்து கொள்ளும் அணைத்து அம்மாக்களுக்கும் ஒரு SALUTE !!!

வீட்டிலேயே முழு நேரமும் இருந்து வீட்டை மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ளும் அணைத்து அம்மாக்களுக்கும் இரண்டு SALUTE!!!