RSS

மலர்க்கொத்து...


கடந்த வாரம் வீட்டுக்காரம்மாவுக்காக ஒரு ரோஜா மலர்க்கொத்து வாங்கிச் சென்றிருந்தேன்.. கதவு திறந்ததுமே முன் நின்றவள் ரித்து தான்.. வாவ்.. ரோஸ் என்று.. ஒரே ஓட்டத்தில் என் கையில் இருந்ததை இழுத்து பிடித்து வாங்கி விட்டாள்..


வாங்கினது மட்டும் என்றால் பரவாயில்லை.. அதில் இருந்த அழகு வேலைப்படுகளை எங்கே கலைத்துவிடுவாளோ என்று ஒரே படபடப்பாகிவிட்டது.. பின்னே மனைவிக்கு வாங்கினதாயிற்றே.. மனைவியும் வந்துவிடவும் ரித்து அப்பாட்ட தாட இது மம்மிக்கு தரனும் என்று நான் சொல்லவும் .. நோ இது ரித்துவுக்குனு தராமல் ஒரே ஓட்டம்.. அதோட இல்லாமல் மலர்க்கொத்தை கையில் வைத்துக்கொண்டே பலவித முக பாவனைகள் வேறு..



வேறு வழியில்லாமல் சரி ரித்து நீயே மம்மிக்கு கொடுடானு சொன்னதற்க்கும்.. இல்லை இது ரித்துக்குனு கடைசி வரை மேடம் தரவேயில்லை.. .

புகைப்படம் எடுக்கும் சாக்கில் கடைசியில் அம்மாவையும் ரித்துவையும் சேர்த்து உட்காரவைத்து தான் மலர்க்கொத்தை மனைவியிடம் தரமுடிந்தது..


5 comments:

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா...ரித்து சோ க்யூட்! கலக்கறாங்க! :-)) அப்புறம் நீங்க அடி வாங்கினதையெல்லாம் சொல்லாம விட்டுட்டீங்க! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாவம் தான் .. :)

கோபிநாத் said...

;-)))

நல்ல அனுபவம் போல...முக பாவனைகள் எல்லாம் கலக்கல் (சந்திரமுகி மாதிரி எல்லாம்) ;))

Unknown said...

ஒரு வழியாக கடைசியாக சமாளித்துவிட்டிங்கனு சொல்லுங்க.A.R.ரகுமானின் மஸ்கட் இசை நிகழ்ச்சி பற்றிய பதிவு என்ன ஆயிற்று?எதிர்பார்த்து இருக்கிறேன்

Rithu`s Dad said...

நன்றி முல்லை / முத்துலெட்சுமி / கோபிநாத் / மின்னல்..

முல்லை.. அடி தானே.. ஒரு முறை இரண்டு முறைன்ன அது பத்தி சொல்ல்லலாம்.. சொல்ல ஆரம்பிச்சா.. தினம் அதுக்கே ஒரு பதிவு போடனும் :)....


மின்னல்..
ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு டிக்கட் எல்லாம் எடுத்து வைத்து விட்டு கடைசி நிமிடத்தில் உடல் நலம் இல்லாததால் செல்ல முடியவில்லை.. மிக்க வருத்தமான விஷயமாகிவிட்டது..

ஆனாலும் அந்த டிக்கட் நண்பர் குடும்பத்திற்க்கு கொடுத்தனுப்பினேன்.. அவரும் நிகழ்ச்சி நன்றாயிருந்த்ததாகவே சொன்னார்! ஆனால் சரியான முறையில் திட்டமிட்டு நடத்தாததால் அரங்கில் நிறைய குளறுபடிகள் என்றும் கூறினார்!! .. போகாததால் எழுதவேண்டாம் என்றிருக்கிறேன் :)

Post a Comment