இப்பொழுது எங்கு நடந்து சென்றாலும் குதிக்காமல் வருவதில்லை.. முதலில் எல்லாம் படிக்கட்டில் ஏறுவதற்க்கே அப்பா என்னை தூக்கு என்பாள்.. பின் அவளே கைப்பிடி பிடித்து ஏற ஆரம்பித்தாள்.. இப்பொழுது எந்த படிக்கட்டுகளாய் இருந்தாலும் தானாகவே ஏறவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே.. நானாய் கைப்பிடித்தாலும் அவள் தனியாக செல்லவே விரும்புகிறாள்..
படிக்கட்டில் ஒரு ஒரு படியாக சாதரனமாக நடப்பவள் கடைசிப்படி என்றாள்.. ஒரே ஜம்பில் கீழே குதிதுவிடுகிறாள்.. அது படிக்கட்டு மட்டும் என்று அல்லாமல் இப்பொழுது “ நடை பாதை” “ காரிலிருந்து இறங்கும் பொழுது” சேரில் இருந்து” என்று எல்லாம் இப்பொழுது அதிகரித்தே இருக்கிறது.. !!!
இதில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றாலும் .... எனக்கு தான் எங்கே கீழே விழுந்து விடுவாளோ என்று பயமாயிருக்கிறது..
2 comments:
:-)) ரித்துவின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் என்னையும் தொற்றிக்கொள்கிறது!
தல..!!!!!
பட் நீங்க போட்டோ பிடிக்கிறதை பார்த்தா பயந்த மாதிரி தெரியலையே ;)) பல விதங்களில் எடுத்திருக்கிங்க ;)
Post a Comment