RSS

காலம் மாறுதா.. வயாசாகுதா.!!?

கடந்த வியாழனன்று கடைக்கு சென்று இருந்தோம்.... ரித்து எல்லாம் பார்த்து கொண்டே வந்தவள்.. VICKS மாத்திரை பார்த்த உடனே எனக்கு VICKS வேணும்னு ஒரே அடம்.. சரிம்மா இரு அப்பா பில் போட்டு வாங்கி தரேன்னு சொன்னா.. " நோ பில்.. ரித்து நோ பில்" னு ரித்து ஒரே அடம்.. அதாவது ரிதுக்கு வாங்கினால் பில் கொடுக்க வேண்டாம்னு மேடம் சொல்றாங்க!!! சரி னு சொல்லி அவ கைல VICKS எடுத்து கொடுத்துட்டு நான் மட்டும் சென்று கௌன்டர் ல VICKS கு பில் கட்டினேன்.. சிறிது நேரத்தில்.. எனக்கு சில பொருட்கள் வாங்க கையில் எடுத்ததும் ரித்து சத்தமாக.. " அச்சா பில்.. பில் first " என்று கூறவும்.. ஒரே சிரிப்பு தான் எனக்கு.. அவளோட சாக்லேட், VICKS, எல்லாம் பில் வேண்டாமாம்.. நான் வாங்கினா மட்டும் உடனே பில் கொடுக்கணுமாம்.. நல்லா இருக்குல்ல??

ரித்து வை நான் கையில் தூக்கி கொண்டு, எல்லாம் வாங்கிட்டு பில் போட்டுட்டு இருக்கறப்போ.. அந்த cahsier மிஷன் முன்னாடி ஒரு சிறு குழந்தையின் வாட்ச் இருந்தது.. ரித்து அதை கைகாட்டி " அச்சா பேபி வாட்ச்" என்றால்.. சரி நானும் அவள் கேட்கிறாளே என்று அந்த வாட்ச் எங்க இருக்கு எனக்கும் ஒன்று வேண்டும் என்று கேட்டேன்.. அவரோ சாரி சார் இது இங்க இல்ல.. ஷாப்பிங் வந்தவங்க யாரோ விட்டுடு போய்டாங்க அதான் எடுத்து வச்சிருக்கோம் என்றார்!

உடனே சிறிது வினாடிகளில் கடைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பரவாயில்லை இந்த வாட்ச்சை நீங்களே எடுத்துக்கோங்க என்றார். நானோ பரவாயில்லை வேண்டம் அவள் இதை வாங்க மாட்டாள் இதே போல் வேறு ஒன்று தான் அவளுக்காக வேண்டும் என்றேன். உடனே அவரே பரவாயில்லை எடுத்துகோங்க என்று ரித்து கையில் எடுத்து கொடுத்தார். ஆனால் உடனே ரித்து வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டாள்.. !! எனக்கும் மனைவிக்கும் ஒரே ஆச்சரியம், எப்படி ரிதுவுக்கு புரிந்தது என்று..!! இத்துணைக்கும் எங்கள் இருவருடய உரையாடல் முழுதும் நடந்தது " ஹிந்தி" யில்..

அவள் புரிந்து வேண்டாம் என்றளா? .. இல்லை எனக்கே எனக்கென்று புதிதாய் தான் வேண்டும், அதனால் இது வேண்டாம் என்று வேண்டாம் என்றாளா? எனக்கும் இன்னும் சரியாய் தெரியவில்லை. இரண்டில் ஒன்று எதுவாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என்று தோன்றுகிறது.


எது கொடுத்தாலும் சரி னு வாங்கிட்டு இருந்த என் காலம் எங்கே..!! எனக்கு என்றால் " இது தான் " வேண்டும் என்று தெளிவாக இருக்கும் இக்கால குழந்தைகள் எங்கே..!!

3 comments:

அமுதா said...

/*எது கொடுத்தாலும் சரி னு வாங்கிட்டு இருந்த என் காலம் எங்கே..!! எனக்கு என்றால் " இது தான் " வேண்டும் என்று தெளிவாக இருக்கும் இக்கால குழந்தைகள் எங்கே..!!*/
உண்மை. க்யூட் அண்ட் ஸ்வீட் ரித்து

சந்தனமுல்லை said...

ஆகா..ரித்து தெளிவா இருக்காங்க! ரகு, நல்ல எழுத்து நடை! தொடர்ந்து எழுதுங்க...ரித்துக்கு வாழ்த்துகள்! அப்பாவுக்கு பில் அமவுண்டை இன்னும் அதிகமா ஏத்தட்டும்! :-)

கோபிநாத் said...

\\அவள் புரிந்து வேண்டாம் என்றளா? .. இல்லை எனக்கே எனக்கென்று புதிதாய் தான் வேண்டும், அதனால் இது வேண்டாம் என்று வேண்டாம் என்றாளா? எனக்கும் இன்னும் சரியாய் தெரியவில்லை. இரண்டில் ஒன்று எதுவாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என்று தோன்றுகிறது. \\


கலக்கியிருங்க ரித்து ;))

உங்களோட முகபாவங்களை வச்சி இது நமக்கு வேண்டாமுன்னு நினைச்சியிருப்பபாங்க.

Post a Comment