RSS

செஸ்..




எனக்கு விபரம் தெரிந்து நான் செஸ் விளையாடுவது நான்காம் வகுப்பிலிருந்து என்று நினைக்கிறேன்.. முழு முதல் காரணம் அப்பா மட்டுமே. அப்பா தான் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் செஸ்ஸில் முதலிடம் இரண்டாம் இடம் என வெற்றி பெற்றுவருவார்.. அதுமில்லாமல் அவர் வீட்டில் இருக்கும் பொழுது படிக்காம இருக்க அவருடன் செஸ் விளையாட ஆரம்பித்தேன்..

முதலில் வெரும் வெட்டும் ஆட்டத்திற்க்காக ஆசைப்பட்டும் அப்பாவுடன் விளையாடும் அனுபவத்திற்க்காக மட்டுமே ஆடினாலும் செஸ் என்னை மிகவும் அதனடன் என்னை ஆட்படுத்திக்கொண்டது.

முதலில் அப்பாவுடன் ஆட ஆரம்பித்த புதிதில் எல்லாம் அப்பா தான் வெற்றிபெறுவார், அப்புறம் நான் அழிச்சாட்டியம் பன்னி வெற்றி பெறுவேன் (அப்பா விட்டுக்கொடுத்துதான்..) ஆனால் ஒன்பதாம் வகுப்பிற்க்குப்பின் ஓரளவு நன்றாக ஆட கற்றுக்கொண்டுவிட்டேன்.. அப்பாவுடனான ஆட்டங்கள் மிக சுவாரசியமாகவும் கடினமாகவும் செல்லும்.. பின் கல்லூரியிலும், கொச்சின் அலுவலக்த்திலுமாக செஸ்ஸில் முதலாய் கொடி நாட்டிய வருடங்கள் பல.. 2000 வருடத்திலிருந்து செஸ்ஸை சுத்தமாக எந்த வடிவிலும் தொடமுடியவில்லை..

கடந்த முறை சென்னை வந்த பொழுது பிரதர் இன் லா லேப்டாப்பில் செஸ்ஸைக்கண்டு சிறிது நேரம் கம்யூட்டருடன் ஆடிக்கொண்டிருந்த பொழுது தான் ரித்து செஸ்ஸைக் கம்யூட்டரில் கண்டு ஆட ஆரம்பித்திருக்கிறாள்.. இந்த மூன்று மாதமாக கம்யுட்டரிலும் செஸ் போர்டிலுமாய் மேடம் விளையாடிக் கொண்ட்டிருக்கிறாள்..

பார்க்கலாம் எவ்ளோ நாள்ள மேடம் என்னை வெற்றிகொள்ளப் போகிறாள் என்று... மிகுந்த ஆர்வம் காட்டினால் மட்டுமே கண்டிப்பாக தேவையான எல்ல முயற்ச்சியும் பயிற்ச்சியும் ரித்துவிற்க்கு உண்டு.. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு அப்பாவின் பயிற்ச்சி நன்கு விளையாடி கல்லூரி அலுவலகத்தில் முதலாய் வருமளவிற்க்கு.... :)

மேலே இருக்கும் புகைப்படங்கள் இந்த மாதம் சென்னையில் ரித்து விளையாடிக்கொண்டிருந்த பொழுது எடுத்தது..

கடந்தமாத புகைப்படங்கள்..

இது ரித்துவின் புதிய ரூமில் அவளுக்கான விளையாட்டு இடம்.. மேடம் ஸ்பைடர் மேனாகவும் கிச்சனிலும் சமைத்துக்கொண்டிருக்கிறாள்.. சமையல் விளையாட்டு உபகரணம் எதோ ஒரு நண்பர் ரித்துவிற்க்கு பிறாந்த நாள் பரிசாக தந்தது..


இப்படி குடுமி போடுறது தான் ரித்துவிற்க்கு ரெம்ப இஸ்டம்.. இப்போ எல்லாம் விளம்பரம் பார்த்து தனக்கும் நீளமான முடி வேனும்னு அடம் வேற.. அவங்க அம்மாவையும் நீள முடி எங்கேனு கேள்வி வேற.. இது நாள் வரை முடி வெட்டி இருந்த அவங்க அம்மா இப்போ ரித்துக்காக.. முடி நீளமாக வளர்க்கிறாங்க..



ரித்துவின் தந்தைக்கும் தந்தையின் தந்தைக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..

ஹேப்பி பாதர்ஸ் டே.. இது தன் ரித்துவின் வாழ்த்து இந்த அப்பாவிற்க்கு.. இதோடு மட்டுமல்லாமல் ஒரு குறுந்தகவலும் உண்டு.. ஆங்கிலத்தில்..

HAPPY FATHERS DAY acha.
Thank you for loving me,
Cuddling me,
Guiding me and for
Being mine.
You are the worlds best dady..
My sweet darling acha oru paadu istam..
Love you Acha..

ரித்துவிற்க்கு அப்பவின் நன்றியும் வாழ்த்துக்களும்..

இனி அப்பாவின் அப்பாவிற்க்கானது..

அப்பாவிற்க்கு வணக்கமும் தந்தையர் தின வாழ்த்துக்களும். முதன் முதலாக உங்களுக்கே மட்டுமான இந்த ஒரு நாளுக்கான எங்களனைவரது வாழ்த்துக்கள்.

எத்தனையே விழாக்களும் பண்டிகைகளுமாக வந்தாலும் எங்களுக்கும் அம்மாவிற்க்கும் என்று என்னி நீங்கள் செய்தவைகளே அதிகம். இன்றுவரை உங்களுக்கு என்று ஒரு ஒரு பண்டிகைக்கும் எடுக்கும் புது துனிகள் கூட நீங்கள் தைத்து அனிவதே சில மாதங்கள் கழித்து தான்..

இது நாள்வரை குடும்ப்பம் குழந்தைகள் எல்லாரும் நல்லா வரனும் என்று என்னி ஓடி ஆடி அதிகமாக செய்த வேலைகள் எல்லாம் போதும் இனியாவது உங்கள் உடல் நிலை அறிந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்..

மீண்டும் உங்களுக்கு எங்களனைவரது தந்தையர் தின வாழ்த்துக்கள்.