மலர்க்கொத்து...
Posted by
Rithu`s Dad
on Wednesday, January 27, 2010
/
Comments: (5)
கடந்த வாரம் வீட்டுக்காரம்மாவுக்காக ஒரு ரோஜா மலர்க்கொத்து வாங்கிச் சென்றிருந்தேன்.. கதவு திறந்ததுமே முன் நின்றவள் ரித்து தான்.. வாவ்.. ரோஸ் என்று.. ஒரே ஓட்டத்தில் என் கையில் இருந்ததை இழுத்து பிடித்து வாங்கி விட்டாள்..
வாங்கினது மட்டும் என்றால் பரவாயில்லை.. அதில் இருந்த அழகு வேலைப்படுகளை எங்கே கலைத்துவிடுவாளோ என்று ஒரே படபடப்பாகிவிட்டது.. பின்னே மனைவிக்கு வாங்கினதாயிற்றே.. மனைவியும் வந்துவிடவும் ரித்து அப்பாட்ட தாட இது மம்மிக்கு தரனும் என்று நான் சொல்லவும் .. நோ இது ரித்துவுக்குனு தராமல் ஒரே ஓட்டம்.. அதோட இல்லாமல் மலர்க்கொத்தை கையில் வைத்துக்கொண்டே பலவித முக பாவனைகள் வேறு..
வேறு வழியில்லாமல் சரி ரித்து நீயே மம்மிக்கு கொடுடானு சொன்னதற்க்கும்.. இல்லை இது ரித்துக்குனு கடைசி வரை மேடம் தரவேயில்லை.. .
புகைப்படம் எடுக்கும் சாக்கில் கடைசியில் அம்மாவையும் ரித்துவையும் சேர்த்து உட்காரவைத்து தான் மலர்க்கொத்தை மனைவியிடம் தரமுடிந்தது..
கடைசிப் படி..
Posted by
Rithu`s Dad
/
Comments: (2)
இப்பொழுது எங்கு நடந்து சென்றாலும் குதிக்காமல் வருவதில்லை.. முதலில் எல்லாம் படிக்கட்டில் ஏறுவதற்க்கே அப்பா என்னை தூக்கு என்பாள்.. பின் அவளே கைப்பிடி பிடித்து ஏற ஆரம்பித்தாள்.. இப்பொழுது எந்த படிக்கட்டுகளாய் இருந்தாலும் தானாகவே ஏறவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே.. நானாய் கைப்பிடித்தாலும் அவள் தனியாக செல்லவே விரும்புகிறாள்..
படிக்கட்டில் ஒரு ஒரு படியாக சாதரனமாக நடப்பவள் கடைசிப்படி என்றாள்.. ஒரே ஜம்பில் கீழே குதிதுவிடுகிறாள்.. அது படிக்கட்டு மட்டும் என்று அல்லாமல் இப்பொழுது “ நடை பாதை” “ காரிலிருந்து இறங்கும் பொழுது” சேரில் இருந்து” என்று எல்லாம் இப்பொழுது அதிகரித்தே இருக்கிறது.. !!!
இதில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றாலும் .... எனக்கு தான் எங்கே கீழே விழுந்து விடுவாளோ என்று பயமாயிருக்கிறது..