RSS

ரித்துவின் விடுமுறை.. அக். 2013

ஏழு நாள் பக்ரீத் விடுமுறையில் டி.வி மற்றும் ஐ பேட் என பொழுதைக் கழித்த ரித்து, கடைசி நாளன்று விளையாட போறேன் என்று அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.. 

நானும் சரி, அவள் இன்னிக்கது அவளோட அறையில் பொம்மைகளோட விளையாடட்டும் என்று விட்டு விட்டேன்..  அந்த ஒரு மணி நேர விளையாட்டின் படைப்புகள் தான் இவை.. 

மிக நுட்பமாக முன்றே செண்டிமீட்டரில் ஒரு ரோஜா பூங்கொத்து.. மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அவளாகவே செய்து அசத்திவிட்டாள்..  இதோடல்லாது ஒரு திருமண நிகழ்ச்சிக்கான ஆட்களையும், வளைவும் சேர்ந்து செய்திருந்தாள்.. 

இதைப்பார்த்ததும் மறுபடியும் ஒரு குழப்பம்.. எல்லா பெற்றோர்களைப்போலவும்  இவளை எந்த கூடுதல் வகுப்பில் சேர்ப்பது என்று. ஏற்க்கனவே பாலே நடனம், பரதம், பாட்டுனு செல்பவளை ஓவியம் மற்றும் நீச்சல் கற்க சேர்க்கனும்னு வரிசை அதிகமாயிட்டே இருக்கு.. இப்பொழுது அதில் களிமன் மாடலிங் கும் சேர்த்துக்க வேண்டிது தான் போல.. 

குழந்தைகளை அதிக வகுப்புகளுக்கு செல்ல விடாமல் நன்கு விளையாட விட வேண்டும் என்று இருக்கும் என் எண்ணம் எல்லம். வெறும் பேச்சில் மட்டும் தான் போல. நமக்காக இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காகவாது எல்லா வகுப்புகளுக்கும் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம்.