RSS

ரித்துவின் பிறந்த நாள்










இன்று பிறந்த நாள் கானும் ரித்துவிற்க்கு என்றென்றும் இன்புற்று வாழ அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அப்பச்சா, அம்மச்சி, மாமா, சித்தப்பா, சித்தி, நண்பர்கள் மற்றும் அனைவரின் அன்பு வாழ்த்துக்கள்.







ரித்துவின் பிராகரஸ்..

ரித்து கடந்த மார்ச் 2010 லிருந்து 1 சென்று கொண்டிருக்கிறாள்.. தினமும் காலை 7.45 க்கு கிளம்பினாள் மேடம் திரும்பி வருவது 1.00 க்கு தான். தினமும் புதிய கதைகள் ரித்துவிடமிருந்து எங்களுக்கு... வகுப்பு மேம் சொல்லி தருவது மட்டுமல்லாமல் அவளது வகுப்பு நண்பர்கள் சொல்வதுமாய் சேர்ந்து..

எழுத்துக்கள்.. எண்கள்.. படம் வரைதல்.. விளையாட்டு.. என எல்லாமுமாய் நிறையவே கற்றுக்கொண்டு வருகிறாள் ரித்து.. வகுப்பு மட்டுமல்லாது இவையனைத்தையும் சிரத்தயாய் ரித்து கற்பதற்க்கு மிக மிக முக்கிய காரனாகர்த்தர் ரித்துவின் அம்மா மட்டுமே.. அனைத்திற்க்கும் கூடவே இருந்து அவளுக்கு கற்பிப்பதோடு மட்டுமல்லாமல்.. ரித்துவிற்க்கு தான் செய்வதில் மிகுந்த ஈடுபாட்டையும் உண்டாக்கியிருக்கிறார்.
அது ரித்து எழுதுவதாயிருந்தாலும் சரி, இல்லை பள்ளிக்கு செல்வதாயிருந்தாலும் சரி, படம் வரைவதாயிருந்தாலும் சரி.. கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதாயிருந்தாலும் சரி... எல்லாவற்றிர்க்கும் ரித்துவின் தாயரின் பங்கே மிக முக்கியமானதாயிருக்கின்றது..

கடந்த மூன்று மாத ரித்துவின் வகுப்பு பிராகரஸ் ரிப்போர்ட் பள்ளியிலிருந்து கடந்த வாரம் கொடுத்திருந்தார்கள்.. எங்களுடைய ஆவல் எல்லாம் அவள் செய்வதில் விருப்பத்தோடும் ஈடுபாட்டோடும் செய்தாலே மிகுந்த மகிழ்ச்சி என்றிருக்கிறோம்.. ரித்து மேடமும் எதிலும் நான் சிறப்பானவள் என்று மீண்டும் இந்த பிராகரஸ் ரிப்போர்ட் மூலம் கான்பித்திருகிறாள் என்றே சொல்ல வேண்டும்..
ரித்துவிற்க்கு.. என்றும் நீ விரும்பி செய்வதில் சிறப்புடன் விளங்க என்றும் எங்களின் வாழ்த்துக்கள்.



இவையனத்திற்க்கும் காரனமே நீ தான் அதானால் நீயே இதில் கையெழுத்து போடு என்று ரித்துவின் அம்மாவிடம் எவ்வளவோ மன்றாடியும்.. கையெழுத்து இடாது.. இது தன்ந்தைக்கு மட்டுமேயான சிறப்பு என்று கூறி என்னை கையெழுத்திட வைத்த என்ற ரித்துவின் அம்மாவிற்க்கு.. என் வணக்கங்கள்..