RSS

பள்ளி..

இது ஒரு மூன்று மாதத்திற்க்கு முன் நடந்தது..

கடந்த மூன்று மாதமாக ரித்துவிற்க்கான பள்ளி எது என்று ஒரே தேடும் படலம் தான் என்னுடைய முக்கியமான வேலையாகிப்போனது! நவம்பர் 14 க்கு பின் துனைவியாரின் முழு நேர நினைவூட்டலால் இன்னும் தேடல் அதிகமாகியது... ஏற்க்கனவே நான் துனைவியிடம் சொல்லியிருந்தது இது தான்.. ரித்துக்கு பள்ளி என்பது அவள் மூன்று வயது கடந்ததும் மட்டுமே என்று.

அதனால் ரித்துவிற்க்கு மூன்று வயது ஆகும் வரை அவ்வப்போது அவர் நினைவுட்டி வந்தார் என்றாலும் கடந்த 1 1/2 மாதங்களாக மிகவும் அதிக முனைப்பெடுத்து ஒரு ஒரு பள்ளியாக (நர்சரி தான்)இருவரும் தேட ஆரம்பித்தோம்..

நினைத்ததும் உடனே கிடைத்துவிடுமா என்ன? வீட்டிற்க்கு அருகில் இல்லை, அல்லது இடவசதி சரியில்லை.. அல்லது குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள் இல்லை.... இப்படியாக ஒரு மாதம் ஓடி விட்டது.. சரி இருக்கறதுலயே பரவாயில்லததாக ஒன்றை தேர்ந்தெடுத்து (அதாங்க நம்ம ஊர்ல ஓட்டு போடறது மாதிரி) இரண்டு வாரத்திற்க்கு முன் ஒரு நல்ல நாள் பார்த்து அந்நாளில் ரித்துவினை சேர்த்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.
நர்சரி காலை 8 மணியிலிருந்து பகல் 12 வரை மட்டுமே..


அவர்களிடம் போனிலேயே என்ன என்ன வேண்டும் என்று கேட்டு முதல் நாள் இரவே எல்லம் எடுத்து வைத்து அவளிடமும் சொல்லியிருந்தோம்.. நானும் அலுவலகத்திற்க்கு விடுமுறை எடுத்திருந்தேன்.

இறுதியில் அந்த நல்ல நாளும் வந்ததும்.. நானும் ரித்துவின் அம்மாவும் 6 மணிக்கே எழுந்து ரெடியாகி காத்திட்டு இருக்கோம்.. ரித்து தான் எழுந்தபாடில்லை..


மணி 7 ஆச்சு..

8 ஆச்சு..

9 ஆச்சு..

ஊகூம்.. ரித்து தான் எழுந்திருக்கவே இல்லை.. சரி இதுக்கு மேல வேண்டாம்னு ரித்துவை நாங்களாகவே எழுப்பினாலும் மேடம் எழுந்திருக்கவே இல்லை..

இவ்வளவுக்கும் 2 நாளா அவதான் பள்ளிக்கு போகனும் ரித்து பள்ளிக்கு போகனும்னு அடம் பன்னிட்டிருந்தால்.. சரி அது சொல்லியாது எழுப்பலாம்னாலும்.. கடைசிவரை எழுந்திருக்கவே இல்லை..

சரி எதோ ரெம்ப மேடம் டயார்டா இருக்கனு நாங்களும் விட்டாச்சு.. கடைசியா ரித்து எழுந்தது 1 மணிக்கு.. எழுந்து கொஞ்ச நேரத்திலயே அப்பா வா பள்ளிக்கு போலாம்னு வேர அடம்.. ஹ்ம்ம்ம்ம்..

பள்ளி மூடின பின் பள்ளிக்கு போலாம்னா எப்புடி? மீதி இருந்த விடுமுறையை ரித்துவுடன் பார்க்கில் சென்று கேம்ஸ் விளையாடுவதில் சென்றுவிட்டது..