RSS

Second day in the earth..


இது மோகிதா பிறந்த இரண்டாம் நாள் எடுத்த புகைப்படம் .. :)

Gift of Love




நவம்பர் 14 - 2006 இது தான் எங்கள் மகள் மோகிதா வின் பிறந்த தினம் .. பிறந்த இடம் இப்பொழுதும் நாங்கள் - நான், மனைவி நிர்மலா மற்றும் மோகிதா - வசித்து கொண்டிருக்கும் மஸ்கட் - ஓமனில்.


எங்கள் மகள் பிறந்த நான்காம் நாள் எடுத்த வீடியோ இது .. வாழ்க்கையின் எத்துணையோ ஏற்ற தாழ்வுகளிலும் என்றுமே இன்பமாய் ஏற்றமாய் அன்பாய் .. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமாய் எங்களுக்கென்று வந்த Angel மோகிதா (அ) ரித்து..

முகவுரை ?

நீண்ட நாள் யோசனை..தாமதத்திற்க்கு.. பின் ஒரு தனி வலைப்பதிவு .. என் பழைய மற்றும் புதிய எண்ணங்கள்.., நிகழ்வுகள், முக்கியமாக எங்கள் மகள்.. ரித்துவின் வளரும் நினைவுகள் குறித்து எழுத வேண்டும் என்ற ஆதங்கம் தான் இதன் முக்கிய தூண்டுகோல் நோக்கம் ஆவல் எல்லாமே..

தினமும் வாழ்வில் தான் எத்தனை நிகழ்வுகள், சந்தோசங்கள், வெறுப்புகள், வருத்தங்கள், படிப்பினைகள், குறைந்தபட்சம் சிலவற்றையாவது பதியலாமே என்று தான் இந்த தொடக்கம்..

நல்ல எழுத்தாளர் இல்லை தான்.. இருந்தாலும் நம்பிக்கையுடன் முயற்சிக்கிறேன்.. முயற்ச்சியும், நம்பிக்கையும் தானே வாழ்க்கையின் இரு கண்கள்...

..... வளரும் .... .....