RSS

அப்பாவிற்க்கு.. அப்பாவிடமிருந்து..

நீண்ட நாட்களாக எழுத நினைத்தது இன்று தான் எழுத முடிந்தது.. என் பிறந்த நாள் என்றாலே எனக்கு முதலில் ஞாபகம் வருவது, எனக்கு கிடைக்கும் புதிய உடைகள் தான்.. எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து படித்து முடித்து வேலையில் சேரும் வரை வந்த எல்லா பிறந்த நாட்களுக்கும் புதிய உடைகள் கிடைத்திருக்கின்றன..

அதே போல் பிறந்த நாள் என்றாலே வீட்டிலும் சரி நண்பர்கள் வட்டத்திலும் சரி, பள்ளியிலும் சரி அன்று முழுவதுமே ராஜ உபசரிப்பு தான்.. எதற்க்கும் திட்டு கிடையாது, எது இரவல் கேட்டாலும் தருவார்கள், கோபமாக கூட பேச மாட்டார்கள்.. எல்லாவற்றிற்க்கும் காரனம்“ பிறந்த நாளன்று செய்வதை அந்த வருடம் முழுவதும் செய்வார்கள்” என்ற நம்பிக்கை தான்.. கண்டிப்பாக எல்ல நண்பர்களுக்கும் அன்று இனிப்போ, சாக்லேட்டோ கொடுக்க தவறியதில்லை..

இதில் சிறப்பு என்னவென்றால் எங்கள் ஊரிலும் சரி உறவினர் வட்டத்திலும் சரி யாரும் பிறந்த நாள் கொண்டாடுவதென்பது என்று எதுவும் கிடையாது. ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் அப்பா வேறு எதற்க்கு புது உடைகள் எடுக்கிறாரோ இல்லையோ ஆனால் நான், தம்பி மற்றும் தங்கை என எங்கள் மூவர் பிறந்த நட்களுக்கும், அவர் அவர் பிறந்த நாட்களில் புது உடைகள் கட்டாயம் எடுத்து தந்து விடுவார்..

ஆனால் இது வரை அப்பாவிற்க்கென்று எந்த பிறந்த நாளையும் நாங்கள் கொண்டாடியதாய் நினைவு இல்லை. அவரும் இது பற்றி சொன்னதும் இல்லை கேட்டதும் இல்லை... எல்லாம் இப்ப “அப்பாவனதும்” தான் தெரிய வருது!!! இவ்வளவு நாட்களாக இது பற்றி ரெம்பவே யோசிக்காமலிருந்த எனக்கு இதை உனர்த்தியதும் இந்த “தகப்பன்மை” தானோ ?

நன்றி அப்பா அனைத்திற்க்கும்..

டால்பின் வாட்ச்..

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (இன் நாள் தான் இங்கு ஞாயிறு போல எல்லோர்க்கும் வார விடுமுறை) எனது அலுவலக நண்பர்கள் எல்லம் சேர்ந்து ஏற்பாடு செய்த சிறு குடும்ப சிற்றுலா தான் “ டால்பின் பார்த்தல்” ..

இரண்டு நாட்களுக்கு முன் தான் எல்லாமே உறுதியானது.. மொத்தம் 25 பேர். சரியாய் வெள்ளி காலை 10.00 மணிக்கு படகு துறைமுகத்தில் அனைவரும் ஆஜராகவேண்டியது என்று முன்னரே அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது..

சிற்றுலா உறுதியானதில் இருந்தே ரித்துவிற்க்கு டால்பின் பார்க்க போகிறோம் என்று அடிக்கடி நினைவுறுத்தி ஆவலை அதிகப்படுத்தியிருந்தோம்.. தண்ணீர் என்றாலே ரித்துவிற்க்கு பயங்கர சந்தோஷம்.. படகு, கடல், டால்பின் என்றதும் சொல்லவே வேண்டாம்.. அந்த இரண்டு நாளா எதாது செய்துட்டு இருக்கும் போது திடிர்னு வந்து.. ”அச்சா டால்பின்” என்று கன்னை மேலே தூக்கி காண்பிப்பாள்.. நாங்களும் நாளைக்கு என்று சொல்லி சமாளித்து வந்தோம்..

வெள்ளிக்கிழமையும் வந்தது.. காலையில் வெகு சீக்கிரமாகவே (8.30 க்கே) எழுந்து எல்லோரும் தயாராகி வீட்டை விட்டு கிளம்ப 9.50 ஆகி விட்டது. ஆனால் ரித்து மட்டும் இன்னும் தூக்கத்திலேயே.. என்னடா இது இவளுக்காக டால்பின் பார்க்கலாம்னு இருந்தால் கடைசி நேரத்தில இப்டி தூங்கிட்டு இருக்காளே என்று ஒரே பதட்டம்.. சரி பரவாயில்லை என்று அவளை தயார் செய்து, தூக்கத்தோடே அழைத்துச் சென்றோம்..

படகுத்துறை வீட்டிலிருந்து பத்து நிமிட பயண தூரம் தான் என்றாலும் இறுதிநேர பதட்டத்தை தவிற்க்க முடியவில்லை.. படகுத்துறை சென்று சேர 10.10 ஆகிவிட்டது.. ஏறக்குறைய அதே சமயத்தில் எல்லோரும் வந்த்து சேர.. 10.30 க்கு குறித்த நேரத்தில் இரண்டு படகுகளில் டால்பினை பார்க்கும் பயணம் தொடங்கியது..

அனைவரும் படகில் ஏறி புறப்படவும் .. ரித்து துக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளவும் சரியாய் இருந்தது.. கடற்கரையிலிருந்து ஒரு இருபது நிமிட கடல் பயனம்.. ரித்து எல்லாவற்றையும் பார்த்து ” அச்சா போட்” “ அச்சா வெள்ளம்” என்று பேச தொடங்கினாள்..

இருபது நிமிட கடலினுள் படகுப்பயனத்திற்க்குப்பின் டால்பின்கள் இருக்கும் இடம் வந்து சேர்ந்தோம்.. நிறையவே டால்பின்கள் அன்று கானக்கிடைத்தன.. ரித்துவும் அச்சா பிஷ் பிஷ் என்று சொல்லியே மீன்களை கண்டு கொண்டிருந்தாள்.. டால்பின்கள் கூட்டம் கூட்டமாக அங்கும் இங்குமாக படகின் இரு புறத்திலும் சென்று கொண்டிருந்தன.. சில நன்கு துள்ளி குதித்து சென்றன..

ரித்துவும் எல்லோரும் சொல்வதைக்கேட்டு அச்சா “டால்பின்” என்று சொல்ல ஆரம்பித்தாள்.. ரித்துவின் டால்பின் ஆர்வம் எல்லாம் ஒரு பத்து நிமிடம் மட்டுமே.. பின் அவளுக்கு டால்பின்களை கான அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் அச்சா “லெட்ஸ் கோ டு ரித்து கவுஸ்” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.


படகோட்டியோ ஒரு இருபது நிமிடம் அப்படியே படகை மிதக்கவிட்டு எல்லோரும் நன்றாக டால்பின்களை பார்க்க ஆவன செய்தார்.. அனைவரும் எவ்வளவோ முயன்றும் டால்பின்கள் கடல் நீருக்கு வெளியே குதிப்பதையும் துள்ளுவதையும் மிக சரியாக புகைப்படம் எடுக்க முடியவில்லை.. ஆனால் எடுத்த வீடியோக்கள் எல்லாம் எதோ பரவாயில்லை.. சரி வந்தவரை போதும் என்று அனைவரும் திரும்ப ஆயத்தமானோம்... வரும் வழியிலும் சில கடற்கரை இடங்களையும், டைவ் செண்டர்களையும் சுற்றிக்காட்டியே அனைவரையும் அழைத்துவந்தார் எங்கள் படகோட்டி..

கடலில் இருந்து வெளியில் வந்து வாகனத்தில் ஏறுவதற்க்காக சென்றபொழுதுதான் தெரிந்த்தது எவ்வளவு வெயில்.. வெப்பம் என்று.. இந்த வெயிலில் வேறு எங்கு செல்வது என்று...நேராக வீட்டுக்கு விடு ஜூட்...