RSS

அப்பா பொண்ணு!

பெண் குழந்தை என்றாலே எல்லாரும் அப்பா பொண்ணுனு தானே சொல்வாங்க ஆனா இவங்க (ரித்து) இதில் மாறுபட்டவங்க. ரித்து எப்பொழுதுமே அம்மா பொண்ணு தான்..

முதல் நாளில் இருந்தே அப்பா எப்பவுமே ஏதாவது தேவைக்கு மட்டுமே.. :)உயரத்தில் இருக்கும் விளையாட்டு பொருள் எடுக்க.. மேலே தூக்கி போட்டு பிடித்து விளையாட.. டிவி யில் மிக்கியும் டோராவையும் அம்மாவை மீறி பார்ப்பதற்கு, என்று அவள் தேவைக்கு மட்டுமே அப்பா செல்லமாக இருப்பாள்.. :)

கடந்த வாரம் அவங்க அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லாததால் சில நாள் நானும் கூடவே வீட்டில் இருக்கவேண்டியதாகியது. அந்த அணைத்து நாட்களும் ரித்துக்கு எல்லாமே அப்பா தான்.. அம்மாவே பால் எடுக்க சென்றால் கூட.. நோ மம்மி அச்சா வே பால் தரட்டும் என்றாள்.. நானும் ரெம்ப மகிழ்வோடு எல்லா நாட்களும் ரிதுவின் விளையாட்டு மற்றும் வேலைகளை உடன் இருந்தே பார்த்துக்கொண்டேன். .. இனிமேல் ரித்து முழுதுமாய் அப்பா செல்லம் தான் என்று எண்ணியிருந்தேன்..

என் இந்த எண்ணம் இரண்டு நாட்கள் வரை மட்டுமே நீடித்தது.. 3 ம் நாளில் இருந்து மீண்டும் ரித்து அம்மா பொண்ணு தான்.. !! நானகவே பால் எடுக்க சென்றால் கூட.. நோ அச்சா .. பால் அம்மாவே எடுக்கட்டும் என்று.. :)

என்ன தான் இருந்தாலும், செய்தாலும் தந்தை.. தாயாக முடியாது இல்லியா?

உண்மையாகவே அவளை முழுதும் நானே பார்த்துக்கொண்ட அந்த சில நாட்கள் சிரமமானவையே.. அது ஒரு நல்ல பாடமாகவும், வீட்டையும் குழந்தையையும் கவனிப்பதில் மனைவியின் சிரமங்களை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே அமைந்தது!!


வேலைக்கும் சென்று வீட்டை மற்றும் குழந்தைகளையும் கவனித்து கொள்ளும் அணைத்து அம்மாக்களுக்கும் ஒரு SALUTE !!!

வீட்டிலேயே முழு நேரமும் இருந்து வீட்டை மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ளும் அணைத்து அம்மாக்களுக்கும் இரண்டு SALUTE!!!

8 comments:

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு ரகு! ரித்துவின் சுட்டித்தனத்தை ரசித்தேன்! ரித்து அம்மா எப்படி இருக்காங்க இப்போ?!

ரிதன்யா said...

அங்கன்னு இல்லங்க
வேலைக்கு போற அப்பாக்களுக்கு இதுதான் நடக்குது.

எனக்கு ஞாயிறு மட்டும் அப்பா பொண்ணு, என்ன கூட நிறைய நேரம் விளையாடனும் அப்பத்தான் 2,3 முத்தமாவது கிடைக்கும்.

Rithu`s Dad said...

Thank you mullai and Rithanya for your encouraging comments.

Mullai : Rithus mom is well now.

Rithanya

முத்தத்துக்கு ஒன்றும் குரைவே இல்லை.. ஆனால் என்ன முத்தம் வாங்க சாக்லேட், பேட், மிக்கி வீடியோ, என்று எதாவது அவங்களுக்கு வேண்டும் என்றால் மட்டும் தானாகவே முததங்கள் வருமே..

அமுதா said...

/*வேலைக்கும் சென்று வீட்டை மற்றும் குழந்தைகளையும் கவனித்து கொள்ளும் அணைத்து அம்மாக்களுக்கும் ஒரு SALUTE !!!

வீட்டிலேயே முழு நேரமும் இருந்து வீட்டை மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ளும் அணைத்து அம்மாக்களுக்கும் இரண்டு SALUTE!!!*/
இரசித்தேன்.

அமுதா said...

/*அவள் தேவைக்கு மட்டுமே அப்பா செல்லமாக இருப்பாள்.. :)
*/
எங்க வீட்டிலேயும் இப்படி தான். ஆனால் பாருங்க ஒரு நாள் அப்பா இல்லைனா அப்பா அப்பானு தேடுவாங்க.

Rithu`s Dad said...

நன்றி அமுதா.. ரித்துவும் அப்படியே.. தினம் காலை எழுந்ததும் கேட்பதே அப்பா எங்கே என்று தானாம்.. இப்போழுதெல்லாம் அவங்களே கேள்வி கேட்டுட்டு அவங்களே “ அப்பா ஆபீஸ்” என்று பதிலுமாம்..

இப்போ எல்லாம் மாலையில் அம்மாவை விட.. ரித்துதான் அப்பாவுக்காக ரெம்பவே வெய்ட்டிங்...

கோபிநாத் said...

ரித்துவின் ஒவ்வொரு அனுபவங்களாக படித்து கொண்டு வருகிறேன்..நன்றாக எழுதியிருக்கிங்க.

ரித்து வளர்ந்ததும் கண்டிப்பாக இதை படித்து அப்பா பொண்ணாக மாறிடுவாங்க ;))

Rithu`s Dad said...

தங்கள் ஊக்கத்திற்கும் வரவுக்கும் நன்றி கோபி..

Post a Comment