RSS

தேர்தல்… இங்கேயும்..!!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, முதன் முதலில் எனக்கு தேர்தலில் வாக்களிக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. இந்த பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது மஸ்கட் தமிழ்ச் சங்கம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த மஸ்கட் தமிழ் சங்கத்தின் வரலாற்றில், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை.

இந்த தேர்தலில் சிறப்பு என்னவென்றால், என் முதன் முதல் வாக்களிப்பில் எனக்கு நானே வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது தான்.. (தேர்வாகவில்லை என்பது வேறு விஷயம்!). அங்கு வந்த சில தமிழர்களை - வயதில் மிகவும் மூத்தவர்க்ள் சிலரும் அடக்கம்- சந்தித்து பேசியதில் கிடைத்த தகவல் என் போன்று பலருக்கும் இது தான் முதல் வாக்களிக்கும் வாய்ப்பாம். வாக்களிக்க வந்த எல்லோருமே மிகுந்த ஆவலோடு வந்து வாக்களித்தனர், மொத்த வாக்குப்பதிவு 81%.

மஸ்கட்டை ஏமாற்றிய திரு. SP பாலசுப்ரமண்யம்..!

கடந்த எப்ரல் 3ம் தேதி திரு.SPB மற்றும் சித்ரா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சிக்கு திறந்தவெளி அரங்கில் (ஆம்பி தியேட்டர்) மஸ்கட் தமிழ் சங்கம் அதன் ஆண்டு மெகா நிகழ்ச்சியாகவும் அவர்களுக்கு ” வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்” வழங்கும் விழாவாகவும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.. நிகழ்ச்சிக்கு “ஒரு பொன் மாலைப் பொழுது” என்றும் பெயர் கொடுத்திருந்தனர்..

ஒரு மாதத்திற்க்கு முன்பிருந்தே மஸ்கட் வாழ் தமிழர்கள் மற்றும் தென் இந்திய மக்களிடையே இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இருக்காதா பின்னே? வருபவர்கள் என்ன சாதரனமானவர்களா? கின்னஸ் சாதனை, தேசிய விருதுகள், மாநில விருதுகள், ஃபிலிம் பேர் விருதுகள் என வாங்காத விருதுகளே இல்லையே.. எத்துனையோ வருடங்களாக தமிழ் சினிமாவில் சிறந்த பின்னனி இசை பாடகர்களாய் திழ்கிறார்கள், கண்டிப்பாக நிகழ்ச்சி களை கட்டும் என்று இங்குள்ள அனைவரும் எதிர்பார்த்திறுந்தோம்.. இன்னும் சொல்ல போனால் எனக்கும் எனது துனைவியாருக்கும் ... என்றால் மிகவும் பிடிக்கும்.. அவருடைய பாடல்கள் இல்லாமல் எந்த கார் பயனமும் இருக்காது.. இதே போல் எத்துனையோ பேர் ஆவலுடன் எதிர்பார்த்திறுந்தோம்.

மேலும் நிகழ்ச்சி மஸ்கட் தமிழ் சங்க உறுப்பினர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் மட்டுமே என்ற அறிவுப்பு வேறு அனைவரது எதிர்பார்ப்பையும் ஆவலையும் பண்மடங்கு உயர்த்தியிருந்தது..(சாதரனமாக இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல விலைகளில் “டிக்கெட்” விற்பனை இருக்கும்..)


எதிர்பார்த்த ஏப்ரல் 3 ம் வந்தது.. நிகழ்ச்சியும் சரியான குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியது (மஸ்கட் தமிழ்ச்சங்கத்தின் சிறப்பு இது.. எந்த நிகழ்ச்சியானாலும் குறித்த நேரத்தில் துவக்குவது..)

திரு.SPBயும் சித்ராவும் வந்திருந்தனர். அரங்கு நிறைந்த 6500க்கும் குறையாத ரசிகர்கள் கூட்டம்.. முதலில் இருவருக்கும் ஒமான் நட்டிற்க்கான இந்தியத்தூதர் ” வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்" இருவருக்கும் வழங்கி கௌவ்ரவித்தார்.


SPB நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கியதையும் மிக கட்டுக்கோப்பான ரசிகர் கூட்டத்தையும் சிலாகித்துவிட்டு.. ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்துடன் முதல் பாடலாய் ”ஒரு பொன் மாலைப் பொழுது” உடன் நிகழ்ச்சியை துவங்கினார் ”

அடுத்ததாய்.. “சங்கரா பரனமு..” வுடனும் அடுத்ததாய் சித்ரா அவர்களின் பாடல்களுடனும் நிகழ்ச்சி தொடர்ந்தது.. 1/2 மணி நேரம்.. 1 மணி நேரம்.. நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் தொடவே இல்லை.. திரு.SPB பாடிய அனைத்து பாடல்களும் சாதரன மக்களிடம் மிகவும் பிரசித்தி பெறாத, சில சங்கீத சிறப்புடைய பாடல்கள் மட்டுமே. அவருடைய பிரசித்தி பெற்ற ரஜினி பாட்டுகள் இல்லை, அவரின் விருதுகள் வாங்கிய பாடல்கள் இல்லை, ரசிகர்களை எழுந்து ஆடவைக்கும் பாடல்கள் இல்லை.. என்னாயிற்று SPB? “காதல் ரோஜாவே” எங்கே? “தங்கத்தாமரை நிலவே “ எங்கே? ” ஒருவன் ஒருவன்” எங்கே? இன்னும் நிறைய பாடல்கள் “ எங்கே எங்கே ” என்று கேட்கவேண்டியதாகிவிட்டது..


ஆனால் சித்ராவோ மக்கள் ரசித்த, விருது வாங்கிய அவருடைய அனைத்து பாடல்களையும் பாட தவறவில்லை..

திரு.SPB யின் பாடல் தேர்வால் - அவருக்கு பிடித்த பாடல்கள், ரசிகர்களை அதிகம் கவராத - ரசிகர்களிடம் அத்துனை வரவேற்பு இல்லை. நாம தான் ரெம்ப நல்லவங்களாச்சே, நிகழ்ச்சி துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே (8 மணிக்கே) கூட்டம் கூட்டமா ரசிகர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்து விட்டனர்.. சாதரனமா இது போன்ற நிகழ்ச்சிக்கு 10 30 வரை எப்பவும் ரசிகர்கள் அமர்ந்த்திருப்பர் (கடந்த ஆண்டு மனோ, சுஜாதா, மனோரமா - வின் இது போன்ற நிகழ்ச்சி 11 மணி வரை அரங்கு நிரைந்து நடந்தது..)

இதில் வருத்தபட வேண்டியது என்னவென்றால், ” ராஜா மாதிரி உட்கார்ந்து கேளுங்கள் நான் உங்கள் அடிமை போல பாடுகிறேன்“ என்று ரசிகர்களிடம் கூறிய திரு.SPB ரசிகர்கள் ”ரஜினி பாட்டு, SUPERSTAR பாட்டு” என்று கூறியபோதெல்லாம்.. எதோ அவருக்கு கேட்காதது போல நடந்து கொண்டதுதான்.. ரசிகர்கள் எதாவது வெகு நேரம் கழித்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. “ நாங்கள் மற்றும் இசைக்கருவிகளுடன் பயிற்ச்சி செய்துவந்த பாடல்கள் மட்டுமே பாட முடியும்.. ” என்று எதோ அனைவருக்கும் ஒரு சப்பைக்கட்டு கட்டினார்.. !! இதிலும் காமெடி!! இன்னிசை குழுவோ “ சாதக பறவைகள்” அவர்களோ திரு.SPB பாடிய ரஜினி பாட்டுக்களையும், அவரின் ஹிட் பாடல்களையும் பாட தாயாராய் இருக்கும் பொழுது, திரு.SPB மட்டும் அவருக்கு பிடித்த பாடல்களை மட்டும் தொடர்ந்து பாடியது ஏனோ?.. திரு.SPB அவர்களே ரஜினியுடன் எதும் கோவமா தங்களுக்கு, அப்படியே இருந்தாலும் காண்பிக்க கூடிய இடம் இதுவல்லவே?!

திரு.SPB அவர்களே தங்களுக்கு வேண்டுமானால் இந்நிகழ்ச்சி பத்தோட பதினொன்றாய் இருக்கலாம்.. ஆனால் என்போன்ற உங்கள் மஸ்கட் வாழ் ரசிகர்களுக்கு உங்கள் பாடல்களை நேரில் கேட்க அரிதாய் வாய்த்த ஒரு நிகழ்ச்சி.. இப்படி ஏமாற்றலாமா?? எத்துனை மேடைகளை கண்டவர் நீங்கள்? எத்துனை பாடல்கள் பாடியவர் நீங்கள்? உங்களுக்கு தெரியாததா?? ரசிகர்களுக்கு என்ன வேண்டும் என்று?? இப்படி ஏமாற்றலாமா எங்களை நீங்கள்????



பி.கு.

நிகழ்ச்சியின் முடிவில் நண்பர் ஒருவரின் காமெண்ட்.. “ இங்க கேட்ட இந்த பாடல்கள் இருக்கும் கேஸட், இப்போ சன், ராஜ், ஜெயா டிவில கூட போடறது இல்லியேப்பா!! ”

காலம் மாறுதா.. வயாசாகுதா.!!?

கடந்த வியாழனன்று கடைக்கு சென்று இருந்தோம்.... ரித்து எல்லாம் பார்த்து கொண்டே வந்தவள்.. VICKS மாத்திரை பார்த்த உடனே எனக்கு VICKS வேணும்னு ஒரே அடம்.. சரிம்மா இரு அப்பா பில் போட்டு வாங்கி தரேன்னு சொன்னா.. " நோ பில்.. ரித்து நோ பில்" னு ரித்து ஒரே அடம்.. அதாவது ரிதுக்கு வாங்கினால் பில் கொடுக்க வேண்டாம்னு மேடம் சொல்றாங்க!!! சரி னு சொல்லி அவ கைல VICKS எடுத்து கொடுத்துட்டு நான் மட்டும் சென்று கௌன்டர் ல VICKS கு பில் கட்டினேன்.. சிறிது நேரத்தில்.. எனக்கு சில பொருட்கள் வாங்க கையில் எடுத்ததும் ரித்து சத்தமாக.. " அச்சா பில்.. பில் first " என்று கூறவும்.. ஒரே சிரிப்பு தான் எனக்கு.. அவளோட சாக்லேட், VICKS, எல்லாம் பில் வேண்டாமாம்.. நான் வாங்கினா மட்டும் உடனே பில் கொடுக்கணுமாம்.. நல்லா இருக்குல்ல??

ரித்து வை நான் கையில் தூக்கி கொண்டு, எல்லாம் வாங்கிட்டு பில் போட்டுட்டு இருக்கறப்போ.. அந்த cahsier மிஷன் முன்னாடி ஒரு சிறு குழந்தையின் வாட்ச் இருந்தது.. ரித்து அதை கைகாட்டி " அச்சா பேபி வாட்ச்" என்றால்.. சரி நானும் அவள் கேட்கிறாளே என்று அந்த வாட்ச் எங்க இருக்கு எனக்கும் ஒன்று வேண்டும் என்று கேட்டேன்.. அவரோ சாரி சார் இது இங்க இல்ல.. ஷாப்பிங் வந்தவங்க யாரோ விட்டுடு போய்டாங்க அதான் எடுத்து வச்சிருக்கோம் என்றார்!

உடனே சிறிது வினாடிகளில் கடைக்காரர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பரவாயில்லை இந்த வாட்ச்சை நீங்களே எடுத்துக்கோங்க என்றார். நானோ பரவாயில்லை வேண்டம் அவள் இதை வாங்க மாட்டாள் இதே போல் வேறு ஒன்று தான் அவளுக்காக வேண்டும் என்றேன். உடனே அவரே பரவாயில்லை எடுத்துகோங்க என்று ரித்து கையில் எடுத்து கொடுத்தார். ஆனால் உடனே ரித்து வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டாள்.. !! எனக்கும் மனைவிக்கும் ஒரே ஆச்சரியம், எப்படி ரிதுவுக்கு புரிந்தது என்று..!! இத்துணைக்கும் எங்கள் இருவருடய உரையாடல் முழுதும் நடந்தது " ஹிந்தி" யில்..

அவள் புரிந்து வேண்டாம் என்றளா? .. இல்லை எனக்கே எனக்கென்று புதிதாய் தான் வேண்டும், அதனால் இது வேண்டாம் என்று வேண்டாம் என்றாளா? எனக்கும் இன்னும் சரியாய் தெரியவில்லை. இரண்டில் ஒன்று எதுவாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என்று தோன்றுகிறது.


எது கொடுத்தாலும் சரி னு வாங்கிட்டு இருந்த என் காலம் எங்கே..!! எனக்கு என்றால் " இது தான் " வேண்டும் என்று தெளிவாக இருக்கும் இக்கால குழந்தைகள் எங்கே..!!

அப்பா பொண்ணு!

பெண் குழந்தை என்றாலே எல்லாரும் அப்பா பொண்ணுனு தானே சொல்வாங்க ஆனா இவங்க (ரித்து) இதில் மாறுபட்டவங்க. ரித்து எப்பொழுதுமே அம்மா பொண்ணு தான்..

முதல் நாளில் இருந்தே அப்பா எப்பவுமே ஏதாவது தேவைக்கு மட்டுமே.. :)உயரத்தில் இருக்கும் விளையாட்டு பொருள் எடுக்க.. மேலே தூக்கி போட்டு பிடித்து விளையாட.. டிவி யில் மிக்கியும் டோராவையும் அம்மாவை மீறி பார்ப்பதற்கு, என்று அவள் தேவைக்கு மட்டுமே அப்பா செல்லமாக இருப்பாள்.. :)

கடந்த வாரம் அவங்க அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லாததால் சில நாள் நானும் கூடவே வீட்டில் இருக்கவேண்டியதாகியது. அந்த அணைத்து நாட்களும் ரித்துக்கு எல்லாமே அப்பா தான்.. அம்மாவே பால் எடுக்க சென்றால் கூட.. நோ மம்மி அச்சா வே பால் தரட்டும் என்றாள்.. நானும் ரெம்ப மகிழ்வோடு எல்லா நாட்களும் ரிதுவின் விளையாட்டு மற்றும் வேலைகளை உடன் இருந்தே பார்த்துக்கொண்டேன். .. இனிமேல் ரித்து முழுதுமாய் அப்பா செல்லம் தான் என்று எண்ணியிருந்தேன்..

என் இந்த எண்ணம் இரண்டு நாட்கள் வரை மட்டுமே நீடித்தது.. 3 ம் நாளில் இருந்து மீண்டும் ரித்து அம்மா பொண்ணு தான்.. !! நானகவே பால் எடுக்க சென்றால் கூட.. நோ அச்சா .. பால் அம்மாவே எடுக்கட்டும் என்று.. :)

என்ன தான் இருந்தாலும், செய்தாலும் தந்தை.. தாயாக முடியாது இல்லியா?

உண்மையாகவே அவளை முழுதும் நானே பார்த்துக்கொண்ட அந்த சில நாட்கள் சிரமமானவையே.. அது ஒரு நல்ல பாடமாகவும், வீட்டையும் குழந்தையையும் கவனிப்பதில் மனைவியின் சிரமங்களை அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே அமைந்தது!!


வேலைக்கும் சென்று வீட்டை மற்றும் குழந்தைகளையும் கவனித்து கொள்ளும் அணைத்து அம்மாக்களுக்கும் ஒரு SALUTE !!!

வீட்டிலேயே முழு நேரமும் இருந்து வீட்டை மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ளும் அணைத்து அம்மாக்களுக்கும் இரண்டு SALUTE!!!